அனுமனால் சோலைஅழிந்தது கேட்ட இராவணன் சீறிய படி இதில் சொல்லப் பெறுகிறது. தீயோன் -இராவணன். (57-1) 7. கிங்கரர்வதைப் படலம் | 433. | ஓசையின்இடிப்பும் கேட்டு, ஆங்கு உருத்து எழு சினத்தன் ஆகி, ‘ஈசன் மால் எனினும் ஒவ்வாது, ஈது ஒரு குரங்கு போலாம் ! கூசிடாது இலங்கைபுக்கு, இக் குல மலர்ச் சோலையோடு மாசு அறு நகரைமாய்க்கும் வலிமை நன்று ! என்ன நக்கான். |
இராவணன் நக்கான்என்க. (1-1) | 434. | என்றலும்,இரு கை கூப்பி, இரு நிலம் நுதலில் தோய, சென்று அடிபணிந்து, ‘மண்ணும் தேவரும் திசையும் உட்க, வென்றி அன்றுஎனினும், வல்லே விரைந்து நாம் போகி, வீரக் குன்று அனகுரங்கைப் பற்றிக் கொணர்தும்’ என்று இசைத்துப் போனார். |
‘வென்றி அன்று’ என்றதுகுரங்கினை வெல்வது ஒரு வெற்றியாகக் கருதப்படாது என்றதாம். (2-1) | 435. | அதுபொழுது, அவர் அது கண்டார்; அடு படை பலவும் எறிந்தார்; கதிகொடு சிலவர்தொடர்ந்தார்; கணை பலர் சிலைகள் பொழிந்தார்; குதிகொடு சிலவர்எழுந்தே குறுகினர்; கதைகொடு அறைந்தார்; மதியொடு சிலவர்வளைந்தார்; மழு, அயில், சிலவர் எறிந்தார். |
|