பக்கம் எண் :

874சுந்தர காண்டம்

      கதி - வேகச்செலவு. கதை - தண்டு.                   (24-1)

436.

அனுமனும்,அவர் விடு படையால், அவர் உடல்
                           குருதிகள் எழவே,
சின அனல் எழ,ஒரு திணி மா மரம்அதில் உடல்
                           சிதறிடவும்
தனுவொடு தலைதுகள்படவும், சர மழை பல
                          பொடிபடவும்
தினவு உறு புயம்ஒடிபடவும், திசைதிசை ஒரு தனி
                          திரிவான்.

     அவர் படையால் அவர்உடல் குருதி எழச் செய்தான்.     (24-2)

437.

உரைத்தஎண்பதினாயிர கோடி கிங்கரரோடு
இரைத்த வந்தமாப் பெரும் படை அரக்கர்
                              எண்ணிலரைத்
தரைத்தலத்தின்இட்டு அரைத்து, ஒரு தமியன்
                             நின்றது கண்டு,
உருத்து அவ்எண்பதினாயிர கோடியர் உடன்றார்.

     எண்பதாயிரம் கோடிகிங்கரரோடு வந்த அரக்கர் மடிந்தனர். (39-1)

438.

சினந்துமற்று அவர், தீ எழப் படைக்கலம் சிதறி,
கனம் துவன்றியதுஎன, கரு மலை என, கடல் போல்
அனந்தனும் தலைதுளக்குற, அமரர்கள் அரவின்
மனம் துளக்குற,வளைத்தனர்,-எண் திசை மருங்கும்.

     கனம் துவன்றியது -மேகம் நெருங்கியது. அனந்தன் - ஆதிசேடன்.
                                                       (39-2)

439.

எடுத்துஎறிந்தனர் எழு மழுச் சிலர்; சிலர் நெருக்கித்
தொடுத்துஎறிந்தனர் சூலங்கள்; சுடு கதைப்
                                        படையால்
அடித்து நின்றனர்சிலர்; சிலர் அருஞ் சிலைப் பகழி
விடுத்துநின்றனர்-வெய்யவர் விளைந்த வெஞ்
                                    செருவே.