பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்875

     கதை -தண்டு.                                       (39-3)

440.

ஒழிந்திடும்கடை உகத்தினில் உற்ற கார்இனங்கள்
வளைந்து பொன்கிரிமேல் விழும் இடி என,
                                  மறவோர்
பொழிந்த பல்படை யாவையும் புயத்திடைப்
                                  பொடிபட்டு
அழுந்த,மற்றவரோடும் வந்து அடுத்தனன், அனுமன்.

     பொன் மலை மேல்விழும் இடி - அனுமன் புயத் திடைப்பட்ட
படைகள். அனுமன் - பொன்மலை.                         (39-4)

441.

‘கட்டும்’ என்றனர்; ‘குரங்கு இது கடிய கைப்
                                படையால்
வெட்டும்’என்றனர்; விழி வழி நெருப்பு உக,
                               விறலோர்
கிட்டி நின்றுஅமர் விளைத்தனர்; மாருதி கிளர் வான்
முட்டும் மா மரம்ஒன்று கொண்டு, அவருடன்
                               முனைந்தான்.

     கிட்டி நின்று -நெருங்கி. வான்முட்டும் மாமரம் - மாமரம் என்றும்
பெரிய மரம் என்றும் கூறலாம்.                            (39-5)

442.

தலைஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; தாளின்
நிலை ஒடிந்திடஅடித்தனன்; சிலர்தமை; நெருக்கிச்
சிலை ஒடிந்திடஅடித்தனன், சிலர் தமை; வயப்
                                    போர்க்
கலை ஒடிந்திடஅடித்தனன், அரக்கர்கள் கலங்க.

     போர்க்கலை ஒடிந்திட- எதிர்ந்தார் கற்று வைத்திருந்த போர்த்திற
அறிவு இல்லையாம்படி.                                    (40-1)

443.

என்றலும்அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன
                                நோக்கி
கன்றிய பவழச்செவ் வாய் எயிறு புக்கு அழுந்தக்
                                கவ்வி,