| | ஒன்றுஉரையாடற்கு இல்லான், உடலமும் விழியும் சேப்ப, நின்ற வாள்அரக்கர்தம்மை நெடிதுற நோக்கும்காலை. |
வாய் எயிறு புக்குஅழுந்தக்கவ்வலும், உடலமும் விழியும் சிவத்தலும் இராவணன் சினத்தின் மெய்பாடுகள். (61-1) 8. சம்பு மாலிவதைப் படலம் | 444. | அது கண்டுஅரக்கன் சினம் திருகி, ஆடற் பகழி அறுநூறு முதிரும் வயப்போர் மாருதிதன் புயத்தில் மூழ்க விடுவித்தான்; புதையுண்டு உருவிப்புறம் போக, புழுங்கி அனுமன் பொடி எழும்பக் குதிகொண்டு,அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதறக் குதித்தனனால் |
அரக்கன் - சம்புமாலி.600 அம்புகளும் அனுமன் புயத்தில் புதைந்து உருவிப் புறம் போயது. (45-1) 9. பஞ்சசேனாபதிகள் வதைப் படலம் | 445. | என்று அவர்ஏவு சரங்கள் இறுத்தே, ‘பொன்றுவிர்நீர், இது போது’ என, அங்கு ஓர் குன்று இரு கைக்கொடு எறிந்து, அவர் கொற்றம் இன்று முடிந்ததுஎனத் தனி ஆர்த்தான். |
பொன்றுவிர் -அழிவீர். கொற்றம் - வெற்றி. (57-1) | 446. | அப்பொழுதுஅங்கு அவர் ஆயிர கோடி வெப்பு அடை வெஞ்சரம் வீசினர்; வீசி, துப்புறுவெற்புஅதனைத் துகள் செய்தே; மெய்ப்படுமாருதிமேல் சரம் விட்டார். |
வெப்பு அடை - வெம்மைபொருந்திய. துப்பு - வலிமை. (57-2) | 447. | விட்டசரத்தை விலக்கி, அ(வ்) வீரன், வட்ட விசும்புறுமா மரம் வாங்கித் |
|