| | தொட்டுஎறிதற்கு மு(ன்)னே, துகளாகப் பட்டிட,வெய்யவர் பாணம் விடுத்தார். |
பாணம் -அம்பு. (57-3) 10.அக்ககுமாரன்வதைப் படலம் | 448. | தடுவையின்மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க உடுஇனம் ஆனதுஎல்லாம் உதிர்ந்த, பூ உதிர்ந்தது என்ன; அடு புலி அனையவீரர் அணிகல ஆர்ப்பும், ஆனை நெடு மணிமுழக்கும், ஓங்கி, மண்ணுலகு அதிர்ந்தது அன்றே. |
இப்பாடலை 5737 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (12-1) | 449. | பத்தியில்தேர்கள் செல்ல, பவளக் கால் புடைகள் சுற்ற, முத்தினில்கவிகை சூழ, முகில் என முரசம் ஆர்ப்ப, மத்த வெங்கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற தத்திய பரிகள்தன்னின் சாமரை தழைப்ப,-போனான். |
இப்பாடலை 5729 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (15-1) | 450. | தீய வல்அரக்கர்தம்மில் சிலர் சிலர் செம் பொற் சின்னம் வாயின் வைத்துஊத, வீரர் வழி இடம் பெறாது செல்ல, காயும் வெங்களிறு, காலாள் கடும் பரி, கடுகிச் செல்ல நாயகன்தூதன்தானும் நோக்கினன்; நகையும் கொண்டான் |
இப்பாடலை, 5731 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (16-1) | 451. | புலிப் போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி, பரி, தேர், பொங்க. கலித்தார்கள்உம்பர் ஓட, கடையுகத்து எறியும் காலின் |
|