பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்879

 

புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல்
     பொங்கிப்பொரு சிலை விளைவித்தான்.

     மிண்டி - நெருங்கி.நிருதன் - அக்ககுமாரன்.             (32-2)

455.

‘மாய்ந்தான், மாருதி கையால், அகிலமும்
     உடையான்மகன்’ என வானோர் கண்டு,
ஓய்ந்தார்இலர்,குதி கொண்டார்; உவகையின்
     ஒழியா நறுமலர் சொரிகின்றார்;
சாய்ந்தார்நிருதர்கள் உள்ளார் தமர் உடல்
     இடறித்திரைமிசை விழ ஓடித்
தேய்ந்தார்சிலர்; சிலர் பிடரியில் குதியடி
     பட ஓடினர்;சிலர் செயல் அற்றார்.

     அகிலமும் உடையான் -இராவணன். அவன் மகன் அக்ககுமாரன்.
பிடரியில் குதிபடல் - ஓட்டத்தின் விரைவைக் குறிக்கும் வழக்குச்சொல். (38-1)

456.

இன்னனநிகழ்வுழி, இராக்கதக் குழாம்
மன்னியசோதியும், அரக்கன் மைந்தனும்,
தன் நிகர்அனுமனால் இறந்த தன்மையை
முன்னினர் சொல,அவன் முன்பு கேட்டனன்.

     மன்னிய சோதி -படைத்திரள் குறிக்கும் சொல் போலும்.    (47-1)

457.

அவ் வகைகண்டவர் அமரர் யாவரும்,
‘உய்வகை அரிது’என ஓடி, மன்னவன்
செவ்அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார்,
எவ் வகைப்பெரும் படை யாவும் மாய்ந்ததே.

     மன்னவன் - இராவணன் -அமரர் - பருவத்தேர்.           (47-2)

458.

ஈது மற்றுஇசைவுற, இது கண்டு ஏங்கியே
மா துயரத்தொடுமறுகு நெஞ்சுடைத்