பக்கம் எண் :

880சுந்தர காண்டம்

 

தூதர் உற்றுஓடினர்; தொழுது, மன்னனுக்கு
ஓதினர்; ஓதல்கேட்டு, உளம் துளங்கினான்.

     தூதர் - பருவத்தேவர்.மன்னன் - இராவணன்.           (47-3)

459. 

நாடினார்;நாடியே, நனை வரும் கொம்பு அனார்
வாடினார்; கணவர்தம் மார்பு உறத் தழுவியே
வீடினார்; அவ்வயின், வெருவி விண்ணவர்கள்தாம்
ஓடினார்;அரசன்மாட்டு அணுகி நின்று உரை
                                 செய்வார்;

     விண்ணவர் -பருவத்தேவர் நனைவரும் கொம்பு - அரும்பு தளிர்க்கும்
கொம்பை ஒத்தவர்                                         (47-4)

.460.

“மைந்தனைமடித்தது குரங்கு” என்று ஓதவும்
வந்தது போலும்,நம் வாழ்வு நன்று !’ எனா,
சிந்தையின்அழன்று, எரி விழித்து, ‘சென்று, நீர்
இந்திரன்பகைஞனைக் கொணருவீர்’ என்றான்.

     மைந்தன் -அக்ககுமாரன். இந்திரன் பகைஞன் - இந்திரசித்து.  (49-1)

461.

என்றலும்,ஏவலுக்கு உரியர் ஓடியே
சென்று, மற்றுஅவன் அடி பணிந்து, தீமை வந்து
ஒன்றியதிறங்களும் உரைத்து, ‘நுந்தையும்
இன்று உனைக்கூவினன்’ எனவும் சொல்லினார்.

     ஏவலர் -இந்திரசித்தை அழைத்தபடி.                   (49-2)

11.பாசப்படலம்

462.

என்றே,‘இவன் இப்பொழுது என்கையினால்
                              மடிந்தால்
நன்றே மலர்மேல்உறை நான்முகன் ஆதி தேவர்,
“பொன்றோம் இனி என்றும்; இருந்து உயிர்
                             போற்றுதற்கு
நின்றே துயர்தீர நிறுத்தினன்” என்ப மன்னோ.’