இவன் -இந்திரசித்து. ‘என்கையால் மடிந்தால் பிரமன் முதலிய தேவர்கள் நம்துன்பம் நீங்கச் செய்தான் என்று சொல்வர்’ என்று அனுமன் நினைத்ததாம். (50-1) | 463. | எழுந்தான்;எழுந்த பொழுது, அங்கு அரக்கரும் எண்இல் கோடி பொழிந்தார்படைகள்; அவை யாவையும் பொடிந்து சிந்திக் கழிந்து ஓடிட,தன் கை மராமரம் கொண்டு வீசி, செழுந் தார்ப்புயத்து அண்ணல் செறுத்து, உடன் மோதலுற்றான். |
செழுந்தார்ப்புயத்துஅண்ணல் - அனுமன். பெயராய் நின்றது. (53-1) | 464. | செறுத்துஎழுந்திடும் அரக்கர்கள் திசை திசை நெருக்கி, மறித்து வெஞ்சமர் மலைதலும், மாருதிக் கடவுள் கறுத்து வஞ்சகர்சிரத்தொடு கரம் புயம் சிதறிப் பொறித்தெறித்திடப் புடைத்தனன், பொரு பணை மரத்தால். |
பொறி தெறித்திட -நெருப்புப் பொறி பறக்க. (59-1) | 465. | புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளைப் பொறியின் தகைந்து, மற்றுஅவர் உடல்களைத் தலைகளைச் சிதறி, மிகும் திறல்கரி, பரி, மணித் தேர், இவை விளிய, புகுந்துஅடித்தனன், மாருதி; அனைவரும் புரண்டார். |
பொறியின் தகைந்து -கலை வன்மையால் தடுத்து. (59-2) | 466. | எடுத்து நாண்ஒலி எழுப்பினன்; எண் திசைக் கரியும் படித் தலங்களும்வெடி பட, பகிரண்டம் உடைய, |
|