| | தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட, சினம் கொண்டு அடுத்து, அம்மாருதி அயர்ந்திட, அடு சரம் துரந்தான் |
இந்திரசித்துவின்செயல் (71-1) 12. பிணி வீட்டுபடலம் | 467. | இனையனபற்பலர் இசைப்ப, வெந் திறல் அனுமனை அமர்க்களம்நின்று, வஞ்சகர் புனை திருநகரிடைக் கொண்டு போதலை நினையினர்,நெடிதுற நெருக்கி நேர்ந்துளார். |
வஞ்சகர் அனுமனைப்பிணித்து நகர்க்குக் கொண்டு செல்லுதலை நினைந்து நெருக்குகிறார்கள். (17-1) | 468. | என்னக்கேட்ட அரக்கனுக்கு ஈறு இலாத் தன் ஓர்ஆற்றலின் மாருதி சாற்றுவான்; ‘என் ஓர்நாயகன் ஏவலின், வாரிதி- தன்னைத் தாண்டிவந்தேன், உனைக் காணவே.’ |
வாரிதி - கடல்.உனை - இங்கு இராவணனை. (108-1) | 469. | தன் உறைக்குஉறுகண் வெய்யோர்தாம் இயற்றலும் கேட்டு, ‘இன்னே, அன்னவர்க்குஇறுதி ஆக, அணி நகர் அழிப்பல்’ என்னா, செந் நிறச்சிகைய வெம் போர் மழு, பின்னர்ச் சேறல் ஓக்கும்- அல் நிறத்துஅண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால். |
தன் இறை - இராமன்.உறுகண் - துன்பம். அனுமன் வால். மழு பின்னால் செல்வது போன்றது. மழு - நெருப்புப்படை. அனுமன் வாலில் நெருப்பு வைத்தபடியால் அது திருமாலின் மழு போன்றதாயிற்று. (135-1) |