| 470. | உகக் கடை, உலகம் யாவும் உணங்குற, ஒரு தன் நாட்டம் சிகைக் கொழுங்கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல, மிகைத்து எழுதீயர் ஆயோர் விரி நகர் வீய; போர் வால்- தகைத்தல் இல்நோன்மை சாலும் தனி வீரன்- சேணில் உய்த்தான். |
உகக்கடை - ஊழிமுடிவு.உணங்குற - காய. தனிலீரன் - அனுமன். (136-1) 13. இலங்கைஎரியூட்டு படலம் | 471. | தெய்வநாயகி கற்பு எனும் செந் தழல் பெய்து மாருதிவாலிடைப் பேணியே, பொய் கொள் வஞ்சகப் புல்லர் புரம் எலாம் வெய்தின் உண்டதகைமை விளம்புவாம். |
சீதையின் கற்பு எனும்நெருப்பு மாருதி வாலிடைப் பாதுகாக்கப்பட்டு வஞ்சகப் புல்லர் நகரை அழித்தது என்றார். (முதற்செய்யுள்) | 472. | தேர்எரிந்தன; எரிந்தன திரள் பரி எவையும்; தார் எரிந்தன;எரிந்தன தருக்கு உறு மதமா; நீர் எரிந்தன;எரிந்தன நிதிக் குவை; இலங்கை ஊர் எரிந்தன;எரிந்தன அரக்கர்தம் உடலம். |
தார் - மாலை. நீர்எரிதல் தீயின் மிகுதியால். (37-1) | 473. | எரிந்தமாளிகை; எரிந்தன இலங்கு ஒளிப் பூண்கள் எரிந்த பூந்துகில்; எரிந்தது முரசுஇனம் முதலாய்; எரிந்த மாமணிப்பந்தர்கள்; எரிந்தது கடிகா; எரிந்த சாமரை;எரிந்தது வெண்குடைத் தொகுதி. |
கடி கா - காப்பமைந்த சோலை. (37-2) | 474. | ஆடு அரங்குகள் எரிந்தன; அரக்கியர் சிறுவ- ரோடு எரிந்தனர்; உலப்பில் பல் கொடிகளும் எரிந்த; |
|