பக்கம் எண் :

884சுந்தர காண்டம்

 

தேடு அரும் மணிச்சிவிகையோடு அருந் திறல்
                           அரக்கர்
வீடு எரிந்தன;எரிந்திடாது இருந்தது என், வினவில் ?

     சிவிகை - பல்லக்கு.உலப்பு இல் - வற்றுதலற்ற.           (37-3)

475.

இனையகாலையில் மயனும் முன் அமைத்தற்கு
                                   இரட்டி
புனைய, மாருதிநோக்கின், இன்னன புகல்வான்;
‘வனையும் என்உருத் துவசம் நீ பெறுக’ என,
                               மகிழ்வோடு
அனையன்நீங்கிட, அனலியும் மறுபடி உண்டான்.

     மயன் - தெய்வத்தச்சன். மயனுக்கு மிகுதி கூறியதாகிய செய்தி
புலப்படவில்லை. அனலி - தீ.                              (37-4)

476.

‘தா இல்மேலவர்க்கு அருந் துயர் விளைத்திடின்,
                           தமக்கே
மேவும், அத்துயர்’ எனும் பொருள் மெய்யுற,
                           மேல்நாள்
தேவர்தம்பதிக்கு இராவணன் இட்ட செந்
                           தழல்போல்,
ஓவிலாது எரித்துஉண்டமை உரைப்பதற்கு எளிதோ ?

     அழகான கருத்து.‘மேலோர்க்குத் துன்பம் செய்தால் அத்துயர் தமக்கே
வரும்’ என்பதற் கிணங்க. அமராவதிக்கு இராவணன் இந்திரசித்து மூலமாக
இட்ட நெருப்பு இலங்கையை எரி்த்தது என்பதாம்.              (43-1)

477.

மற்று ஒருகோடியர் வந்தார்;
உற்று எதிர் ஓடிஉடன்றார்;
கற்று உறு மாருதிகாய்ந்தே,
சுற்றினன்வால்கொடு, தூங்க.

     உடன்றார் -சீறினார்.                               (58-1)