பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்885

478.

உற்றவர் யாரும் உலந்தார்;
மற்றுஅதுபோதினில் வானோர்
வெற்றி கொள்மாருதிமீதே
பொன் தரு மா மலர் போர்த்தார்.

     உலந்தார் -வற்றினார். பொன்தரு - கற்பகம்.             (60-1)

479.

வன் திறல்மாருதி கேண்மோ !
நின்றிடின், நீபழுது; இன்றே
சென்றிடுவாய் !’என, தேவர்
ஒன்றிய வானில்உரைத்தார்.

     தேவர் அனுமனைச்செல்லப் பணித்தனர்.               (60-2)

480.

விண்ணவர்ஓதிய மெய்ம்மை
எண்ணி, ‘இராமனைஇன்றே
கண்ணுறலே கடன்’என்று, ஆங்கு
அண்ணலும் அவ்வயின் மீண்டான்,

     கண்ணுறல் -சந்தித்தல்.                            (60-3)

481.

வாலிதின்ஞான வலத்தால்,
மாலுறும் ஐம் பகைமாய்த்தே,
மேல் கதிமேவுறும் மேலோர்
போல், வயமாருதி போனான்.

     வாலிதின் -தூய்மையான. ஐம்பகை - ஐம்பொறிகளாய பகை. மேல்கதி
செல்லும் மேலோர் போல் அனுமன் வானவழியில் இலங்கையினின்று
சென்றான்.                                            (63-1)
 

14. திருவடி தொழுதபடலம் 

482.

போயினர்களிப்பினோடும், புங்கவன் சிலையின்
                          நின்றும்
ஏயின பகழி என்னஎழுந்து, விண் படர்ந்து, தாவி,
காய் கதிர்க்கடவுள், வானத்து உச்சியில் கலந்த
                          காலை,
ஆயின வீரரும்போய், மதுவனம் அதில் இறுத்தார்.