பக்கம் எண் :

886சுந்தர காண்டம்

     வானரர் இராமன்அம்பு போல் சென்றனர்; நன்பகலில் மதுவனம்
சேர்ந்தார்.                                                (11-1)

483.

“ஏத நாள்இறந்த சால” என்பது ஓர் வருத்தம்
                                நெஞ்சத்து
ஆதலான், உணர்வுதீர்ந்து வருந்தினம், அளியம்;
                                எம்மைச்
சாதல் தீர்த்துஅளித்த வீர ! தந்தருள் உணவும்’
                                என்ன,
‘போதும் நாம்,வாலி சேய்பால்’ என்று, உடன்
                              எழுந்து போனார்.

     இப்பாடலை 6018ஆம்பாடலுடன் ஒப்பிடுக. வீர ! - அனுமனே. வாலி
சேய் - அங்கதன்.                                         (11-2)

484.
 

அங்கதன்தன்னை அண்மி, அனுமனும் இரு கை
                           கூப்பி
‘கொங்கு தங்குஅலங்கல் மார்ப ! நின்னுடைக்
                           குரக்குச் சேனை,
வெங் கதம்ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி;
இங்கு, இதற்குஅளித்தல் வேண்டும், இறால் உமிழ்
                           பிரசம்’ என்றான்.

     கதம் - கோபம்.இங்கே வேகம் எழுச்சி எனலாம். வேடை களைப்பு.  
                                                       (11-3)

485.

‘நன்று’ என,அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க
                                    ஆர்த்து,
சென்று, உறுபிரசம் தூங்கும் செழு வனம்  
                                 அதனினூடே,
ஒன்றின் முன்ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென்
                               பிரசம் எல்லாம்
தின்றுதின்றுஉவகைகூரும்-தேன் நுகர் அளியின்
                              மொய்த்தே.

     நரலை - கடல். மதுவனம்அழித்தல்.                  (11-4)