பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்887

486.

ஒருவர் வாய்க் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு
                            ஒழிவர்; உண்ண
ஒருவர் கைக்கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு
                            ஓடிப் போவர்;
ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர்; விழுவர்; ஓடி
ஒருவர்மேல்ஒருவர் தாவி ஒல்லென உவகை
                            கூர்வார்.

     மதுவனத்தில்குரங்குகளின் கூத்தாட்டம்.                 (11-5)

487.

இன்னனநிகழும்காலை, எரி விழித்து, எழுந்து சீறி,
அந் நெடு்ஞ்சோலை காக்கும் வானரர் அவரை
                            நோக்கி,
‘மன் நெடுங்கதிரோன் மைந்தன் ஆணையை
                            மறுத்து, நீயிர்,
என் நினைத்துஎன்ன செய்தீர் ? நும் உயிர்க்கு
                            இறுதி’என்ன.

     மதுவனக் காவலர்அச்சுறுத்தல்                         (11-6)

488.

‘முனியுமால் எம்மை, எம் கோன்’ என்று, அவர்
                           மொழிந்து போந்து,
‘கனியும் மாமதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று,
நனி தரு கவியின்தானை, நண்ணலார் செய்கை
                           நாண;
இனி எம்மால்செயல் இன்று’ என்னா, ததிமுகற்கு
                           இயம்பினாரே.

     ததிமுகன் - மதுவனக்காவல் தலைவன்; இவன் சுக்கிரீவன் ஏவலால்
மதுவனம் காக்கும் வானரன்.                                (11-7)

489.

கேட்டவன்,‘யாவரே அம் மதுவனம் கேடு
                              சூழ்ந்தார் ?
காட்டிர்’ என்றுஎழுந்தான்; அன்னார்,‘வாலி சேய்
                             முதல கற்றோர்