பக்கம் எண் :

888சுந்தர காண்டம்

 

ஈட்டம் வந்துஇறுத்தது ஆக, அங்கதன் ஏவல்
                                 தன்னால்,
மாட்டின,கவியின் தானை, மது வளர் உல வை
                                 ஈட்டம்.

     மதுவளர் உலவை -தேன்கூடு.                          (11-8)

490.

‘உரம் கிளர் மதுகையான்தன் ஆணையால், உறுதி
                                கொண்டே,
குரங்கு இனம்தம்மை எல்லாம் விலக்கினம்;
                            கொடுமை கூறி;
கரங்களால் எற்றநொந்தேம்; காலலோய் !’
                            என்னலோடும்,
‘தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தநயன்
                            போலும்.’

     தாதை - வாலி - தநயன்- அங்கதன்.                  (11-9)

491.

என உரைத்து,அசனி என்ன எழுந்து, இரைத்து,
                                 இரண்டுகோடி
கனை குரல்கவியின் சேனை ‘கல்’ எனக் கலந்து
                                 புல்ல,
புனை மதுச் சோலைபுக்கான்; மது நுகர் புனிதச்
                                 சேனை,
அனகனைவாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த.

     அசனி - இடி. அனகன் -இராமன்.                    (11-10)

492.

‘இந்திரன்வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் 
                          கானம்;
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை
                          தன்னைச்
சிந்தினை;கதிரோன் மைந்தன் திறலினை அறிதி
                          அன்றே ?
மந்தரம் அனையதோளாய் ! இற்றது உன் வாழ்க்கை
                          இன்றே.