பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்889

      ததிமுகன்அங்கதனை நோக்கிக் கூறியது.                (11-11)

493.

‘மதுவனம்தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ’
                          என்னா,
கதுமென வாலிசேய்மேல் எறிந்தனன், கருங் கற்
                          பாறை;
அதுதனைப்புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி,
ததிமுகன்தன்னைப்பற்றிக் குத்தினன், தடக்
                        கைதன்னால்.

     ததிமுகன் அங்கதன் போர்.                          (11-12)

494.

குத்தினன்என்னலோடும், குலைந்திடும் மெய்யன்
                           ஆகி,
மற்று ஒருகுன்றம்தன்னை வாங்கினன்,
                           மதுவனத்தைச்
செற்றனன்மேலேஏவிச் சிரித்தனன், ததிமுகன்தான்;
‘இற்றனன், வாலிசேய்’ என்று இமையவர் இயம்பும்
                           காலை,

     செற்றனன் -அங்கதன்.                             (11-13)

495.

ஏற்று ஒருகையால் குன்றை இருந் துகள் ஆக்கி,
                                மைந்தன்
மாற்று ஒருகையால் மார்பில் அடித்தலும்,
                         மாண்டான் என்ன,
கூற்றின் வாய்உற்றான் என்ன, உம்பர் கால்
                         குலையப் பானு
மேல் திசைஉற்றான் என்ன, விளங்கினன், மேரு
                         ஒப்பான்.

     பானு- சூரியன்                                     (11-14)

496.

வாய் வழிக்குருதி சோர, மணிக் கையால் மலங்க
                           மோதி,
‘போய் மொழி, கதிரோன்மைந்தற்கு’ என்று, அவன்
                           தன்னைப்போக்கி,