| | நாற்றிசைமருங்கினும் ஏவி, நாயகன்- தேற்றினன்இருந்தனன்-கதிரின் செம்மலே. |
மரை - தாமரை;முதற்குறை, கதிரின் செம்மல் - சுக்ரீவன். (12-1) | 500. | நோக்கின்தென் திசை அல்லது நோக்குறான், ஏக்குற்றுஏக்குற்று இரவி குலத்து உளான், ‘வாக்கில் தூயஅனுமன் வரும்’ எனா, போக்கிப்போக்கி, உயிர்க்கும் பொருமலான். |
இராமன் அனுமனை ஏவிஎதிர்பார்த்து இருந்தவாறு கூறியது. (14-1) | 501. | என்றுஉரைத்து, இடர் உழந்து இருக்கும் ஏல்வையின் வன் திறல்ததிமுகன் வானரேசன் முன், தன் தலைபொழிதரு குருதிதன்னொடும், குன்று எனப்பணிந்தனன், இரு கை கூப்பியே. |
மதுவனக் காவலன்ததிமுகன் சுக்ரீவனைக் காணல். இது முதல் இருபது பாடல்கள் ததிமுகன் வருகையால் வானரர் சீதையைக் கண்டு இனிது திரும்பிய படியைக் குறிப்பால் அறிந்தது கூறப்பெறுகிறது. (19-1) | 502. | எழுந்துநின்று, “ஐய ! கேள், இன்று நாளையோடு அழிந்தது மதுவனம்அடைய’ என்றலும், வழிந்திடுகுருதியின் வதனம் நோக்கியே, ‘மொழிந்திடு,அங்கு யார் அது முடித்துளோர் ?’ என, |
ததி முகன்கூற்று. (19-2) | 503. | ‘நீலனும், குமுதனும், நெடிய குன்றமே போல் உயர்சாம்பனும், புணரி போர்த்தென மேல் எழுசேனையும், விரைவின் வந்து உறா, சால்புடைமதுவனம்தனை அழிப்பவே. |
நீலன், குமுதன்,சாம்பன், வானர சேனைகள் மதுவனம் அழித்தார் என்று ததிமுகன் கூறல். (19-3) |