504. | தகைந்த அச்சேனையைத் தள்ளி, நின்னையும், இகழ்ந்துஉரைத்து, இயைந்தனன் வாலி சேய்; மனக்கு உகந்தன புகன்றஅவ் உரை பொறாமையே, புகைந்து, ஒருபாறையின் புணர்ப்பு நீக்கியே, |
அங்கதன் செயல்கூறியது (19-4) 505. | ‘இமைத்தல்முன், “வாலி சேய், எழில் கொள் யாக்கையைச் சமைத்தி” என்றுஎறிதர, புறங்கையால் தகைந்து, அமைத்தரு கனல்என அழன்று, எற் பற்றியே குமைத்து, உயிர்பதைப்ப, “நீ கூறு போய்” என்றான். |
அங்கதன் என்னை அடித்து‘நீ போய் கூறு’ என அனுப்பினான் என்று ததிமுகன் கூறல். (19-5) 506. | ‘இன்று நான்இட்ட பாடு இயம்ப முற்றுமோ ?’ என்று உடல்நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில், அன்று அவன்உரைத்தல் கேட்டு, அருக்கன் மைந்தனும் ஒன்றியசிந்தையில் உணர்ந்திட்டான் அரோ. |
ததிமுகன்கூற்றால் சுக்ரீவன் உணர்தல். (19-6) 507. | ஏம்பலோடுஎழுந்து நின்று, இரவி கான்முளை, பாம்பு அணைஅமலனை வணங்கி, “பைந் தொடி மேம்படுகற்பினள்” என்னும் மெய்ம்மையைத் தாம்புகன்றிட்டது, இச் சலம்’ என்று ஓதினான். |
ததிமுகனுக்கும் வானரவீரர்க்கும் நிகழ்ந்த இச்சண்டை ‘பிராட்டி மேம்படு கற்பினள்’ என்பதை நமக்குத் தெரிவிக்கிறது என்று சுக்ரீவன் இராமனிடம் கூறல். (19-7) 508. | ‘பண் தரு கிளவியாள்தன்னைப் பாங்குறக் கண்டனர்; அன்னதுஓர் களிப்பினால், அவர் |
|