பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்893

 

வண்டு உறைமதுவனம் அழித்து மாந்தியது;
அண்டர் நாயக !இனி அவலம் தீர்க’ என்றான்.

     சீதையைக் கண்டமகிழ்ச்சியால் வானரர் ‘மதுவனம் அழித்து மாந்தியது’
என்று சுக்ரீவன் உணர்த்துதல்.                                 (19-8)

509.

‘வந்தனர்தென் திசை வாவினார்’ என,
புந்தி நொந்து,‘என்னைகொல் புகலற் பாலர் ?’ என்று
எந்தையும்இருந்தனன்; இரவி கான்முளை,
நொந்த அத்ததிமுகன்தன்னை நோக்கியே.

     சுக்ரீவன் ததிமுகனை வினாவுதல்.                     (19-9)

510.

‘யார் அவண்இறுத்தவர், இயம்புவாய் ?’ என,
‘மாருதி, வாலிசேய், மயிந்தன், சாம்பவன்,
சோர்வு அறுபதினெழுவோர்கள் துன்னினார்,
ஆர்கலி நாணவந்து ஆர்க்கும் சேனையார்.’

     ததிமுகன்பதில்                                   (19-10)
                    

511.

என்று,அவன்  உரைத்த போது, இரவி காதலன்,
வன் திறல்ததிமுகன் வதனம் நோக்கியே,
‘ஒன்று உனக்குஉணர்த்துவது உளது;  வாலி சேய்,
புன் தொழில்செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால்.

      அங்கதன்நல்லவனே என்று ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல்.   
                                                (19-11)

512.

‘கொற்றவன்பணி தலைக்கொண்டு, தெண் திரை
சுற்றிய திசைஎலாம் துருவி, தோகையைப்
பற்றியபகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து
உற்றனர்; அவரையாம் உரைப்பது என்னையோ ?

     அரசுப்பணி மேற்கொண்டு திரும்பியவர்களைக் கடிதல் ஒல்லாது என
சுக்ரீவன் உணர்த்தல்.                                   (19-12)

513.

‘அன்றியும், வாலி சேய் அரசு அது; ஆதலின்,
பின்றுதல்தீதுஅரோ; பிணங்கும் சிந்தையாய் !