புகல் அரும்- நுழையமுடியாத; முழையுள் துஞ்சும் - குகையின்கண் உறங்கின்ற; பொங்கு உளைச்சீயம் - சிலிர்க்கின்ற பிடரி மயிரையுடைய சிங்கங்கள்; பொங்கி - கொந்தளித்து; உகல் அருங் குருதி கக்கி - சிந்தக் கூடாத இரத்தத்தை வெளிப்படுத்தி; உள்ளுற நெரிந்த - உள்ளே சிதைந்தன; பறவை எல்லாம் - எல்லாப் பறவைகளும்; அகல் இரும் ஊழின் பரவைநாண - பரந்த பெரிய ஊழிக்காலத்துக் கடல்கள் வெட்கம் அடைய; அரற்றுறு குரல ஆகி - கதறுகின்ற கூக்குரலை உடையனவாய்; பகல் ஒளி கரப்ப - சூரியனுடைய பிரகாசம் மறையும்படி; வானை மறைத்தன - ஆகாயத்தை மூடின. அனுமன் திருவடிபடஅழுந்திய மலைக்குகைக்குள் சிங்கங்கள் குருதி கக்கி நெரிந்தன. பறவைகள் வானை மறைத்தன. நெரிதல் - சிதைதல், நொறுங்குதல். வாளரக்கன் தலை பத்தும் நெரித்தவன் (நாவரசர் - மன்னு மலைமகள் 10) (4) | 4745. | மொய்யுறுசெவிகள் தாவி, முதுகுஉற,முறைகால் தள்ள, மைஅறு விசும்பினூடு நிமிர்ந்தவாலதிய, மஞ்சின் மெய்உறத்தழீஇய, மெல்லென் பிடியொடும்வெருவ லோடும் கையுற மரங்கள்சுற்றி, பிளிறின-களிநல் யானை. |
களிநல் யானை- மதமயக்கமுடைய பெரிய யானைகள்; மைஅறு விசும்பினூடு - மேகம் இல்லாத ஆகாயத்தின்கண்; நிமிர்ந்த வாலதிய - நீண்ட வாலையுடைய (யானைக் கன்றுகள்); மொய்உறு செவிகள் - வலிமை மிக்க காதுகள்; தாவி முதுகுற - பரவி முதுகைச்சார (அதனால்); முறைகால் தள்ள -பருவக் காற்று வீச; மஞ்சின் மெய்யுறத் தழீஇய - மேகத்தைப் போல(த்தம்) உடம்பைத் தழுவிக் கொண்ட; மெல்லென் பிடியொடும் - மென்மையான பெண் யானைகளுடன்; வெருவலோடும் - அச்சத்தோடும்; கைஉற மரங்கள் சுற்றி - கைகளால் மரங்களைச் சுற்றிக் கொண்டு; பிளிறின - வீறிட்டுக் கதறின. யானை, கன்று,பிடியுடன் அச்சத்தோடு மரங்களைப் பற்றிப் பிளிறின. வாலதிய - வாலையுடைய கன்று. வாலதி - வால். அ - |