| வீக்கு இழந்தது வீழ்ந்தது, வரை சுழல் |
| விரி சுடர் வீழ்ந்தென்ன. |
| |
தாக்குகின்றன - தான் விடுத்த அம்புகள் கவசத்தின் மீது மோதுகின்றன எனினும்; தலையது நுழைகில - நுனிகள் கவசத்தினுள் நுழைய மாட்டாதனவான தன்மையை; தாமரைத் தடங்கண்ணான் நோக்கி - தாமரைத் தடங்கண்ணன் ஆன இராமன் பார்த்து; இங்கு இது சங்கரன் கவசம் என்று- இக்கவசம் சிவன் அளித்தது என்று; உணர்வுற நுனித்து உன்னி- உணர்வு தோன்ற அதை நுணுகி எண்ணிப் பார்த்து; அங்கு அவன் அடு படை ஆக்கி - அப்போது சிவனது கொல்லும் தன்மையுள்ள அம்பினை வில்லில் பூட்டி; தொடுத்து விட்டு அறுத்தனன் - தொடுத்துவிட்டு அழித்தனன்; அது சிந்தி வீக்கு இழந்தது - அச்சிவ கவசம் கட்டுக் குலைந்ததாகி; வரைசூழ் விரிசுடர் வீழ்ந்தென்ன வீழ்ந்தது - மேருமலையை வலமாக வரும் கதிரவன் வீழ்ந்தது போல் ஒளியுடன் பூமியில் விழுந்தது. |
சிவனது கணை பாசுபதக்கணை எனப்படும். சிவகவசத்தை சிவனது கணையால் இராமன் அறுத்தனன். |
(332) |
| 7604. | காந்து வெஞ் சுடர்க் கவசம் அற்று உகுதலும், |
| கண்தொறும் கனல் சிந்தி, |
| ஏந்து வல் நெடுந் தோள் புடைத்து ஆர்த்து, அங்கு |
| ஓர் |
| எழு முனை வயிரப் போர் |
| வாய்ந்த வல் நெடுந் தண்டு கைப்பற்றினன்; |
| 'வானரப் படை முற்றும் |
| சாந்து செய்குவனாம்' என முறை முறை |
| அரைத்தனன். தரையோடும். |
| |
வெஞ்சுடர் காந்து கவசம் - வெப்பமான ஒளியை வெளியிடுகிற கவசம்; அற்று உகுதலும் - அறுபட்டுச் சிந்திய அளவில்; கண் தொறும் கனல் சிந்தி - தன் இரு கண்களிலும் நெருப்புப் பொறியைச் சிந்தி; ஏந்து வல்நெடுந் தோள் புடைத்து ஆர்த்து- ஓங்கிய வலிய நெடிய தோளைத தட்டிப் பேரொலி செய்து; அங்கு - அப்போது; எழுமுனை வயிரப் போர் வாய்ந்த ஓர் வல்நெடுந் தண்டு கைப்பற்றினன் - இரும்பு முனை உடையதும் உறுதியுடையதும், போர்க்கு வாய்த்ததும் ஒப்பற்றதுமான வலிய |