நெடிய தண்டாயுதத்தைக் கையில் கொண்டவனாய்; வானரர் படை முற்றும் சாந்து செய்குவனாம் என- குரங்குப்படை முழுவதையும் சாந்து போல் ஆக்கி விடுவான் என்று கண்டோர் கருதுமாறு; முறை முறை தரையோடும் அரைத்தனன் - முறை முறையாகத் தரையோடும் அரைக்கலானான். |
(333) |
| 7605. | பறப்ப ஆயிரம், படுவன ஆயிரம், |
| பகட்டு எழில் அகல் மார்பம் |
| திறப்ப ஆயிரம், திரிவன ஆயிரம், |
| சென்று புக்கு உருவாது |
| மறைப்ப ஆயிரம், வருவன ஆயிரம், |
| வடிக் கணை என்றாலும், |
| பிறப்ப ஆயிடைத் தெழித்துறத் திரிந்தனன், |
| கறங்கு எனப் பெருஞ் சாரி. |
| |
பறப்ப ஆயிரம் - வானத்தில் பறப்பவை ஆயிரம்; படுவன ஆயிரம் - பகைவர் மேல் படுவன ஆயிரம்; பகட்டு எழில் அகல் மார்பம் திறப்ப ஆயிரம் - பெருமையும் அழகும் பெற்று அகன்ற மார்பைப் பிளப்பன ஆயிரம்; திரிவன ஆயிரம் - பறந்து திரிவன ஆயிரம்; சென்று புக்கு உருவாது மறைப்ப ஆயிரம் - பகைவர் உடம்பில் போய் உள் புகுந்து தொளைத்திடாமல் மறைந்தன ஆயிரம்; வருவன ஆயிரம் - இராமன் வில்லில் இருந்து வெளிப்பட்டு வருவன ஆயிரம்; வடிக்கணை என்றாலும் - கூரிய அம்புகள் என்றாலும்; பிறப்ப - வாயிடைப் பேரொலி தோன்ற; ஆயிடை- அங்கே; தெழித்து - அதட்டிக்கொண்டு; கறங்கு எனப் பெருஞ்சாரி உறத் திரிந்தனன் - காற்றாடி போல் பெருஞ்சாரி மிகத் திரிந்தனன் என்க. |
இராமன் வடிக்கணை பல்வேறு அழிவுகளைச் செய்தாலும் அதற்கு அஞ்சாது கும்பகருணன் பெருஞ்சாரி திரிந்தனன். |
(334) |
| 7606. | 'தண்டு கைத்தலத்து உளதுஎனின், உளதன்று |
| தானை' என்று, அது சாயக் |
| கொண்டல் ஒத்தவன், கொடுங் கணை பத்து ஒரு |
| தொடையினில் கோத்து எய்தான்; |
| கண்டம் உற்றது மற்று அது; கருங் கழல் |
| அரக்கனும், கனன்று, ஆங்கு ஓர் |