| மண்டலச் சுடராம் எனக் கேடகம் |
| வாங்கினன், வாளோடும். |
| |
தண்டு கைத்தலத்து உனது எனின்- தண்டாயுதம் இவனது கையில் உள்ளதானால்; தானை உளதன்று என்று- குரங்குச் சேனை உயிரோடு இருத்தல் முடியாது என்று எண்ணி; அது சாய - அந்தத் தண்டு அ ழியுமாறு; கொண்டல் ஒத்தவன் - கருமேகத்தை ஒத்த நிறத்தவன் ஆகிய இராமன்; ஒரு தொடையினில் - ஒரு தொடுப்பினில்; கொடுங்கணை பத்துக் கோத்து எய்தான்- கொடிய அம்புகள் பத்தினை வில்லில் கோத்து எய்தான்; மற்று அது கண்டம் உற்றது- அதனால் அந்தத் தண்டாயுதம் துண்டாகி விட்டது; கருங்கழல் அரக்கனும் - அதனால் கரிய கழலை அணிந்த அரக்கன் ஆகிய கும்பகருணனும்; கனன்று - சினம் கொண்டு; ஆங்கு - அப்போது; ஓர் மண்டலச் சுடராம் என வாளோடும் கேடகம் வாங்கினன் - ஒப்பற்ற பூமியில் விளங்கும் கதிரவன் என்னுமாறு ஒளியுடை வாளும் கேடகமும் கைக்கொண்டான். |
(335) |
| 7607. | வாள் எடுத்தலும், வானர வீரர்கள் |
| மறுகினர், வழிதோறும் |
| தாள் எடுத்தனர், சமழ்த்தனர்; வானவர் |
| தலை எடுத்திலர், தாழ்ந்தார்; |
| 'கோள் எடுத்தது, மீள' என்று உரைத்தலும், |
| கொற்றவன், 'குன்று ஒத்த |
| தோள் எடுத்தது துணித்தி' என்று, ஒரு சரம் |
| துரந்தனன், சுரர் வாழ்த்த. |
| |
வாள் எடுத்தலும்- கும்பகருணன் வாள் படையை எடுத்த உடனே; வானர வீரர்கள் மறுகினர் - குரங்குப் படை வீரர்கள் மனம் கலங்கி; வழி தோறும் தாள் எடுத்தனர் - வழி தோறும் கால் விசைத்து ஓடினர்; வானவர் சமழ்த்தனர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் - தேவர்கள் போர்க்களத்தினராய்த் தலை தூக்க முடியாது தலையைத் தொங்கவிட்டனர்; கோள் எடுத்தது மீள - உயிர்க் கொள்ளை தொடங்கியது மீளவும்; என்று உரைத்தலும் - என்று துணைவர்கள் சொல்லலும்; கொற்றவன்- வெற்றி பொருந்திய இராமன்; எடுத்தது- வாளை எடுத்ததான; குன்று ஒத்த தோள் துணித்தி என்று- குன்று ஒத்த தோளைத் துணிப்பாயாக என்று |