சொல்லி; ஒருசரம் சுரர் வாழ்த்த துரந்தனன்- ஒப்பற்ற அம்பினைத் தேவர்கள் வாழ்த்தச் செலுத்தினான். |
(336) |
கும்பகருணன் கை அறுபடல் |
| 7608. | அலக்கணுற்றது தீவினை; நல்வினை |
| ஆர்த்து எழுந்தது; வேர்த்துக |
| கலக்கமுற்றனர், இராக்கதர்--'கால வெங் |
| கருங் கடல் திரை போலும் |
| வலக் கை அற்றது, வாளொடும்; கோளுடை |
| வான மா மதி போலும்; |
| இலக்கை அற்றது, அவ் இலங்கைக்கும் இராவணன் |
| தனக்கும்' என்று எழுந்து ஓடி. |
| |
தீவினை அலக்க ணுற்றது- தனக்கு உதவும் கும்பகருணன் கை அறப் போவதால் தீவினை துன்பமடைந்தது; நல்வினை ஆர்த்து எழுந்தது - நல்வினை மகிழ்ச்சியால் பேரொலி யெழுப்பியது; கால வெங்கருங்கடல் திரை போலும் - உகமுடிவுக்காலத்தில் பொங்கி எழுகின்ற கருங்கடலின் அலையைப் போன்ற; வலக்கை - வலக்கையானது; கோளுடை வானமாமதி போலும் வாளொடும் அற்றது- இராகுவினால் பற்றப்பட்டுக் குறைபடுதலை உடைய வானத்து நில போன்ற வாளோடு அறுபட்டு வீழ்ந்தது; அவ் இலங்கைக்கும் இராவணன் தனக்கும் - அதனால் இலங்கைப் பெருநகருக்கும் இராவணனுக்கும்; இலக்கை அற்றது - பாதுகாவல் நீங்கியது; என்று எழுந்து ஓடி- என்று சொல்லிக்கொண்டு எழுந்து ஓடி; இராக்கதர் வேர்த்துக் கலக்கமுற்றனர் - அரக்கர்கள் உடல் வியர்த்து மனம் கலங்கினர். |
தீவினை நல்வினை என்பன "வினைத்தெய்வம்" என்று தொல்காப்பியம் கிளவியாக்கம் கூறும். |
(337) |
| 7609. | மற்றும், வீரர்கள் உளர் எனற்கு எளிதுஅரோ, |
| மறத்தொழில் இவன் மாடு |
| பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது-- |
| பேர் எழில் தோளோடும் |
| அற்று வீழ்ந்த கை அறாத வெங் கையினால் |
| எடுத்து, அவன் ஆர்த்து ஓடி |