பக்கம் எண் :

966யுத்த காண்டம் 

எற்ற, வீழ்ந்தன, எயிறு இளித்து ஓடின 

வானரக் குலம் எல்லாம்? 

 

பேர்  எழில்  தோளோடும்  - மிக்கு  எழுந்து  வளர்ந்த
அழகிய  தோளுடன்; அற்று வீழ்ந்த கை-  அறுபட்ட வீழ்ந்த
வலக்கையை; அறாத  வெங்கையினால்  எடுத்து- அறுபடாது
உள்ள  கொடுமையான   இடக்கையினால்    எடுத்துக்கொண்டு;
அவன் ஆர்த்து ஓடி- அக்கும்பகருணன் பேரொலி  எழுப்பிக்
கொண்டு ஓடி; எற்ற எயிறு  இளித்து  ஓடின- அடித்ததனால்
பல்லை இளித்துக் கொண்டு  ஓடின;  வானரக்  குலமெல்லாம்
- குரங்குக் கூட்டங்கள் எல்லாம்; வீழ்ந்தன- உயிரொழிந்து
வீழ்ந்தன;  மறத்தொழில்   இவன்  மாடு  பெற்று நீங்கினர்
ஆம்
- இவ்வாறு வீரப் போரிட்ட இவனிடத்து  வீரத்தை இரந்து
பெற்றவர்கள் ஆம்;எனின்  அல்லது- தவிரப்  பிறர்;  மற்றும்
வீரர்கள் உளர்   எனற்கு எளிதரோ
-  வீரர்களாக   வேறு
பிறந்தவர் உளர் என்று சொல்லுதல் எளிமையானதோ அன்று.
 

வலக்கையை   இடக்கையால்   எடுத்துக்    கும்பகருணன்
விளைவித்த  வீரச்  செயலின்  சிறப்பை  இப்பாடலின் பின்னிரு
வரிகள்    விளக்குகின்றன.    இவனிடம்  வீரத்தை    இரந்து
பெற்றவர்கள் வேண்டுமானால் வீரர்களாக இருக்கலாமே அன்றிப்
பிறர்   இவனைக்   காட்டிலும்   சிறந்த   வீரர் என்றுரைத்தல்
எளிமையான செயலன்று என்றவாறு. 
 

(338)
 

7610.

வள்ளல் காத்து உடன் நிற்கவும், வானரத் 

தானையை மறக் கூற்றம் 

கொள்ளை கொண்டிட, பண்டையின் மும்மடி 

குமைக்கின்ற படி நோக்கி, 

'வெள்ளம் இன்றொடும் வீந்துறும்' என்பதோர் 

விம்மலுற்று உயிர் வெம்ப, 

உள்ள கையினும் அற்ற வெங் கரத்தையே 

அஞ்சின, உலகு எல்லாம். 

 

வள்ளல் காத்து உடன் நிற்கவும்- வள்ளல் தன்மை  உள்ள
இராமன்   சேனையைக்   காத்து   உடன்  இருக்கவும்; வானரத்
தானையை 
-  குரங்குச்   சேனையை; மறக்கூற்றம் கொள்ளை
கொண்டிட
- வலிமை உடைய யமன் கொள்ளை  கொள்ளும்படி;
பண்டையின் மும்மடி  குமைக்கின்ற  படி  நோக்கி- முன்பு
அழித்ததை