பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 967

விட மூன்று மடங்கு அழிக்கின்ற  தன்மையைப்  பார்த்து;உலகு
எல்லாம்
- உலகோர் எல்லாம்;    வெள்ளம்   இன்றொடும்
வீந்துறும் என்பதோர் விம்மலுற்று
- குரங்கு  வெள்ளமானது
இன்றே அழிந்து போய்விடும் என்று  கருதுவதால்  துன்பத்தைக்
கொண்டு; உயிர் வெம்ப - உயிர் துடிக்க;   உள்ள  கையிலும்
அற்ற வெங்கரத்தையே அஞ்சின
- அற்றுப் போகாமல் உள்ள
கையினும், அற்றுப் போன கொடிய கரத்தைக் கண்டே
பயந்தனர்.
 

இடக்கையால் அற்ற வலக்கையை எடுத்து  மோதி  அடித்து
அழிப்பதால  அற்றகைக்கு   உலகு     அஞ்சின  என்ற நயம்
காண்க. 
 

(339)
 

7611.

மாறு வானரப் பெருங் கடல் ஓட, தன் 

தோள்நின்று வார் சோரி 

ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட, மேல் 

அமரரும் இரிந்து ஓட, 

கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் 

பறவையும் குலைந்து ஓட, 

ஏறு சேவகன்மேல் எழுந்து ஓடினன், 

மழைக் குலம் இரிந்து ஓட. 

 

மாறு வானரப் பெருங்கடல் ஓட- பகையாக உள்ள வானரப்
பெரும் படையாகிய கடல் நிலை கெட்டு ஓட; தன் தோள் நின்று
வார் சோரி   ஆறு
- தன்   தோளில்   இருந்து      வடிகின்ற
குருதியாகிய  ஆறு;   விண்தொடும்   பிணம்   சுமந்து   ஓட
- விண்ணைத்     தொடுமளவு    போர்க்களத்தில்   குவிந்துள்ள
பிணங்களைச் சுமந்து கொண்டு ஓட;  மேல்  அமரரும்  இரிந்து
ஓட
-  வானத்தில்   உள்ள  தேவர்களும்   நிலை  கெட்டு ஓட;
இலங்கையும் விலங்கலும் பறவையும் கூறு கூறுபட்டு குலைந்து
ஓட
- இலங்கை நகரும்  அங்குள்ள  மலைகளும்  பறவை  முதலிய
உயிரினங்களும் குருதி ஆற்றின் வேகத்தால் பலவகையாகப் பிரிந்து
நிலைகுலைந்து ஓட; மழைக்குலம் இரிந்தோட- மேகக் கூட்டம்
நிலை கெட்டு ஓட; ஏறு சேவகன்  மேல்  எழுந்து  ஓடினன் -
சிங்கவேறு போன்ற இராமன் மேல் எழுந்தோடினன் கும்பகருணன்
என்க.
 

(340)
 

7612.

'ஈற்றுக் கையையும் இக் கணத்து அரிதி' என்று 

இமையவர் தொழுது ஏத்த, 

தோற்றுக் கையகன்று ஒழிந்தவன் நாள்அவை 

தொலையவும், தோன்றாத