| கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட, நெடுங் |
| கொற்றவன் கொலை அம்பால் |
| வேற்றுக் கையையும் வேலையில் இட்டனன், |
| வேறும் ஓர் அணை மான. |
| |
ஈற்றுக் கையையும் இக்கணத்து அரிதி என்று- மற்றொரு கையையும் இப்பொழுதே அரிந்திடுவாய் என்று; இமையவர் தொழுது ஏத்த- தேவர்கள் கைதொழுது துதிக்க; தோற்றுக் கையகன்று ஒழிந்தவன் - இராமனுக்கு முன் வலி தோற்று வலக்கை நீங்கி ஒழிந்தவனாகிய கும்பகருணனுடைய;நாள் அவை தொலையவும் - வாழ்நாள்கள் கெடுமாறும்; தோன்றாத கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட - இதுவரை அரக்கர் கண்முன் தோன்றியிராத யமனுக்கு ஐயமும் அதனால் வரும் அச்சமும் நீங்குமாறும்; நெடுங்கொற்றவன் - மிக்க வெற்றிக்குரிய இராமன்; கொலை அம்பால்- கொல்லும் தன்மை உள்ள தன் அம்பால்; வேற்றுக் கையையும்- மற்றொரு கையையும்; வேறும் ஓர் அணை மான வேலையில் இட்டனன் - வேறு அணையென்று தோன்றுமாறு கடலில் இட்டனன். |
ஈற்றுக்கை-மற்றொருகை (இடக்கை) கையகன்று செயலற்று எனினுமாம். வேறும் ஓர் அணை மான-முன்பு கட்டிய சேது அணை இப்போது இட்ட கும்பகருணனின் இடக்கை வேறு ஓரணை என்றார். |
(341) |
| 7613. | சந்திரப் பெருந் தூணொடுஞ் சார்த்தியது, |
| அதில் ஒன்றும் தவறு ஆகாது, |
| அந்தரத்தவர் அலை கடல் அமுது எழக் |
| கடைவுறும் அந் நாளில், |
| சுந்தரத் தடந் தோள் வளை மாசுணம் |
| சுற்றிய தொழில் காட்ட, |
| மந்தரத்தையும் கடுத்தது,--மற்று அவன் |
| மணி அணி வயிரத் தோள். |
| |
சுந்தரத் தடந் தோள்வளை- அழகிய பெரிய தோளில் அணிந்த வளையானது; மாசுணம் சுற்றிய தொழில் காட்ட- பாம்பு சுற்றிய தன்மையைத் தோற்றுவிக்க; மற்று அவன் மணி அணி வயிரத் தோள்- அந்தக் கும்பகருணனுடைய மணி பதித்த |