பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 969

அணிகலன்களை அணிந்த வயிரத் தோள்கள்; சந்திரப் பெருந்
தூணொடுஞ் சார்த்தியது
- சந்திரனாகிய  பெரிய  தூணோடு
சார்த்தியதாய்; அதில் ஒன்றும் தவறு  ஆகாது- கடைகின்ற
அந்த மத்தின் தன்மையில் குறைவு  படாததாய்; அந்தரத்தவர்
அலைகடல்  அமுது எழக்
- தேவர்கள் அலைகளை உடைய
பாற்கடலில்  அமுது தோன்றுமாறு; கடைவுறும் அந்நாளில்-
கிடைகின்ற  அந்நாளில்;  மந்தரத்தையும்  கடுத்தது- மந்தர
மலையையும் ஒத்தது.
 

தோள்வளையுடன் கடலில்  வீழ்ந்த  கும்பகருணனது  கை
பாற்கடலில்   நடப்பட்டு   வாசுகி   என்ற   பாம்பு   சுற்றிய
மந்தரமலை  போல்  தோன்றியது.  சந்திரப்   பெருந்தூணோடு
சேர்த்தியது.  மந்தரத்தையும்   கடுத்தது   என்று   இயையும்.
சந்திரப் பெருந்தூணோடு சார்த்தியது என்பது  கடல்  கடைந்த
காலத்து    மந்தரத்துக்கு      இயற்கை        அடைமொழி.
மாசுணம்-பாம்பு. 
 

(342)
 

7614.

சிவண வண்ண வான் கருங் கடல் கொடு வந்த 

செயலினும், செறி தாரை 

சுவண வண்ண வெஞ் சிறையுடைக் கடு விசை 

முடுகிய தொழிலானும், 

அவண அண்ணலது ஏவலின் இயற்றிய 

அமைவினும், அயில் வாளி 

உவண அண்ணலை ஒத்தது; மந்தரம் 

ஒத்தது, அவ் உயர் பொன் தோள். 

 

சிவண வண்ண வான் கருங்கடல் கொடு வந்த செயலினும் -
தனக்குத்தானே  ஒத்த  நிறமுடைய  அழகிய  பெரிய   கடலில்
கொண்டு  சேர்த்த  செயலாலும்; செறி தாரை சுவண வண்ண
வெஞ்சிறை  உடைக்  கடுவிசை  முடுகிய  தொழிலானும்
-
நெருங்கிய   ஒளித்தொகுதியாகிய  பொன்னிறத்தைக்  கொண்ட
விரும்பத்தக்க சிறகுடன் மிக்க விரைவுடன்   விரைந்து  சென்ற
செயலாலும்;   அவண   அண்ணலது  ஏவலின்  இயற்றிய
அமைவினும்
- அவ்விடத்து  இராமபிரானது   கட்டளைப்படி
தொழில்  செய்த  தன்மையினாலும்;    அயில்வாளி  உவண
அண்ணலை ஒத்தது
- இராமபிரானது   கூர்மையான  அம்பு
கருடனை  ஒத்தது;  அவ் உயர்  பொன்  தோள் மந்தரம்
ஒத்தது
- அக்கும்பகருணனுடைய  உயர்ந்த அழகிய  தோள்
மந்தர மலையை ஒத்தது.
 

கடலில் சேர்த்த  செயலாலும்,  பொன்னிறம்  கொண்ட
சிறகுடன்   விரைந்து  சென்ற  தன்மையாலும்,  இராமனது
கட்டளைப்படி தொழில்