பக்கம் எண் :

970யுத்த காண்டம் 

பட்ட தன்மையாலும் வாளி கருடனை ஒத்தது கும்பகருணன் தோள்
மந்தரம் ஒத்தது   என்க.  உவண  அண்ணல்-கருடன்.  திருமால்
பாற்கடலைக்  கடைதற்  பொருட்டு  கருடனை  அனுப்பி  மந்தர
மலையைக் கொணரச் செய்ததாக ஒரு வரலாறு  உண்டு.  என்பது
இச்செய்யுளால்   புலனாகிறது,   மகாபாரதத்தில்     திருமாலின்
கட்டளையால் அநந்தன் என்னும் நாகராசன்  மந்தர  மலையைப்
பெயர்த்துத் தந்ததால்    தேவர்கள்  பாற்கடலைக்  கடைந்தனர்
என்ற  செய்தி    காணப்படுகிறது.  சுவண   வண்ணம் - பொன்
வண்ணம். 
 

(343)
 

கும்பகருணன் கால்களை இழத்தல்
 

7615.

பழக்க நாள் வரும் மேருவை உள்ளுறத் 

தொளைத்து, ஒரு பணை ஆக்கி, 

வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் 

வான் குணில் வலத்து ஏந்தி, 

முழக்கினாலென, முழங்கு பேர் ஆர்ப்பினான், 

வானர முந்நீரை 

உழக்கினான், தசை தோல் எலும்பு எனும் இவை 

குருதியொடு ஒன்றாக. 

 

பழக்க நாள் வரும் மேருவை- வழக்கமாகச் சூரியன் வலமாக
வரும் மேருமலையை; உள்ளுறத் தொளைத்து ஒரு பணை ஆக்கி-
உள்ளே பொருத்தமாக துளைத்து ஒருமுரசம்  செய்து; வழக்கினால்
உலகு அளந்தவன்
  -  முறைமையினால்  உலகை  அளந்தவனான
திரிவிக்கிரம  அவதாரமாகிய  கடவுள்;    அமைத்தது   ஓர்வான்
குணில் வலத்து ஏந்தி
- அமைத்ததாகிய பெரிய குறுந்தடி ஒன்றை
வலக்கையில்   ஏந்தி;    முழக்கினாலென    முழங்கு   பேர்
ஆர்ப்பினான்
-  அடித்து  முழக்கியதை  ஒத்த  பேர்  ஒலியைச்
செய்தவன் ஆகிய கும்பகருணன்; தசை, தோல், எலும்பு  எனும்
இவை  குருதியொடு  ஒன்றாக
- தசை, தோல் எலும்பு என்னும்
இவை குருதியோடு  சேர்ந்து  ஒன்றுபடும்படி;  வானர  முந்நீரை
உழக்கினான்
- வானரப் படையாகிய கடலைக் கலக்கினான்.
 

இப்பாடலில்  முதல்  மூன்று அடிகளில் கும்பகருணன் செய்த
பேரொலியை மேருமலையை உள் துளைத்துச் செய்த முரசத்தைத்
திரிவிக்கிரமக்    கடவுள்   அமைத்த   குணிலால்   அடித்தால்
ஏற்படும் ஒலிக்கு உவமை கூறினார். 
 

(344)