| | கும்பகருணன் வதைப் படலம் | 971 |
| 7616. | நிலத்த கால், கனல், புனல், விசும்பு, இவை முற்றும் | | நிருதனது உரு ஆகி, | | கொலத் தகாதது ஓர் வடிவு கொண்டாலென | | உயிர்களைக் குடிப்பானை, | | சலத்த காலனை, தறுகணர்க்கு அரசனை, | | தருக்கினின் பெரியானை, | | வலத்த காலையும், வடித்த வெங் கணையினால் | | தடிந்தனன்--தனு வல்லான். | | | நிலத்த கால், கனல், புனல் விசும்பு இவை முற்றும் - நிலத்தொடு காற்று, நெருப்பு, நீர் ஆகாயம் என்கிற இவை முழுவதும்; நிருதனது உரு ஆகி- அரக்கனது வடிவம் பெற்று; கொலத் தகாதது ஓர் வடிவு கொண்டாலென- கொல்ல முடியாத ஒரு உருவைக் கொண்டது போலத் தோன்றி; உயிர்களைக் குடிப்பானை - உயிர்களை அழிப்பவனும்; சலத்த காலனை- சினம் கொண்ட யமன் போன்றவனும்; தறுகணர்க்கு அரசனை- அஞ்சாமையுடையோர்க்கு அரசன் போன்றவனும்; தருக்கினில் பெரியானை- செருக்கினில் மிக்கவனும் ஆகிய கும்பகருணனது, வலத்த காலையும்-வலது காலையும்; வடித்த வெங்கணையினால் - கூரிய கொடிய அம்பினால்; தனுவல்லான் தடிந்தனன் - வில்லாளியான இராமன் அறுத்து வீழ்த்தினான். | நிலம் நீர் தீ வளி வான் என்னும் ஐந்தும் கலந்து மயக்கம் இவ்வுலகமும் உலகில் வாழும் உயிரினங்களின் உடலும் என்பது நூலோர் கருத்து. கும்பகருணனுடைய உடல் இவ்வுலகில் உள்ள பஞ்சபூதங்கள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிச் செய்தது போல் உள்ளதென்று முதலடியில் கூறுகிறார். பெரியானை - வலத்தகாலை தடிந்தனன் பெரியானது காலை வெட்டினான் என்றோ பெரியானைக் காலின் கண் வெட்டினான் என்றோ மாற்றிப் பொருள் கொள்க. | (345) | | 7617. | பந்தி பந்தியின் பற் குலம் மீன் குலம் | | பாகுபாடு உற, பாகத்து | | இந்து வெள் எயிறு இமைத்திட, குருதி யாறு | | ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் | | அந்தி வந்தென, அகல் நெடு வாய் விரித்து, | | அடி ஒன்று கடிது ஒட்டி, |
|
|
|