பக்கம் எண் :

972யுத்த காண்டம் 

குந்தி வந்தனன், நெடு நிலம் குழி பட, 

குரை கடல் கோத்து ஏற. 

 

பந்தி பந்தியின் பற்குலம்  மீன்குலம்  பாகுபாடு  உற-
வரிசை    வரிசையாக  உள்ள  பற்களின்  கூட்டம்  நட்சத்திரக்
கூட்டம் போல் பாகுபாடு உற்று விளங்க; பாகத்து இந்து வெள்
எயிறு இமைத்திட
-  அதனிடையே  பிறைச்  சந்திரன்  போல்
நீண்ட   கோரைப்   பல்   விளங்கித்   தோன்ற;   குருதியாறு
ஒழுக்கல்   கொண்டு   எழு   செக்கர் அந்தி வந்தென
-
குருதியாற்று   ஒழுக்கினால் எழுகின்ற செம்மை செவ்வானத்தை
உடைய அந்திப் பொழுது வந்தது போல் தோன்ற அகல் நெடு
வாய் விரித்து
- தன் அகன்ற பெரிய வாயை விரித்துக்கொண்டு;
நெடுநிலம் குழிபட -  நெடிய  நிலம்  குழிபட;  குரை கடல்
கோத்து ஏற
- அதனால் ஒலிக்கின்ற கடல் நீர் நிலத்தின் மீது
பரவ; அடி ஒன்று கடிது ஒட்டி குந்தி வந்தனன் - ஒற்றைக்
காலடி மேல்   எழுந்து   வலிமையாகப் பூமியில் பொருந்துமாறு
நொண்டிக் கொண்டு போரிட வந்தான். 
 

(346)
 

7618.

மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து, மாடு 

உள எலாம் வளைத்து ஏந்தி, 

சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து, மேல் 

தொடர்கின்ற தொழிலானை, 

ஏறு சேவகன், எரி முகப் பகழியால், 

இரு நிலம் பொறை நீங்க, 

வேறு காலையும் துணித்தனன், அறத்தொடு 

வேதங்கள் கூத்தாட. 

 

மாறுகால் இன்றி- மற்றொரு கால்  இல்லாமல்;    வானுற
நிமிர்ந்து 
- வானத்தைப்  பொருந்துமாறு  ஓங்கி;  மாடு  உள
எலாம்
- பக்கத்தில் உள்ளவைகளை எல்லாம்; வளைத்து ஏந்தி
- நாவால் வளைத்துக் கடித்து ஏந்திய வண்ணம்; சூறை மாருதம்
ஆம் என
- கடுங்காற்று  ஆகும்  என்று  கண்டோர் கூறுமாறு;
சுழித்து   மேல்  -  வட்டமிட்டு     மேல்;    தொடர்கின்ற
தொழிலானை
  -    கொல்லும்    தொழிலைத்   தொடர்கின்ற
கும்பகருணனை; ஏறு சேவகன்- ஆண் சிங்கம் போன்றவனாகிய
இராமன்; எரிமுகப் பகழியால் -  நெருப்பை நுனியில் கொண்ட
அம்பால்;   இருநிலம்   பொறை   நீங்க- பெரிய  நிலத்தின்
பாரம் குறையும்படி; அறத்தொடு வேதங்கள்