பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 973

கூத்தாட  -   அறக்கடவுளும்  வேதங்களும்  கூத்தாட;  வேறு
காலையும் துணித்தனன்
- மற்றொரு காலையும் துணித்தனன். 
 

(347)
 

7619.

கை இரண்டொடு கால்களும் துணிந்தன; 

கரு வரை பொருவும் தன் 

மெய் இரண்டு நூறாயிரம் பகழியால் 

வெரிந் உறத் தொளை போய; 

செய்ய கண் பொழி தீச் சிகை இரு மடி 

சிறந்தன; தெழிப்போடும், 

வய்யம் வானிடை மழையினும் பெருத்தது, 

வளர்ந்தது, பெருஞ் சீற்றம். 

 

கை இரண்டொடு கால்களும் துணிந்தன- கை இரண்டுடனே
கால்கள் இரண்டும் துண்டுபட்டன; கருவரை பொருவும் தன் மெய்
- தன்னுடைய பெரிய மலையை ஒத்த உடல்; - இரண்டு நூறாயிரம்
பகழியால்
   -  இருநூறு  ஆயிரம்  அம்புகளால்; வெரிந்  உறத்
தொளை போய
- முதுகுவரை மிகுதியாகத் துளையாக்கியது; செய்ய
கண்பொழி   தீச்சிகை
-  சிவந்த  கண்களில்  இருந்து நெருப்பு
அனல்; இருமடி சிறந்தன - இரண்டு  மடங்கு  மிக்கது;   பெருஞ்
சீற்றம்  -  மிக்க   சினம்;   தெழிப்போடும்  -  பேரொலியோடு;
வய்யம் வானிடை மழையினும் பெருத்தது  வளர்ந்தது - நில
உலகில் வானத்திடையில்  தோன்றும்  இடியொலி  போல்  மிக்கு
வளர்ந்தது.
 

வையம்-வய்யம்-போலி. 
 

(348)
 

கும்பகருணன் மலைகளைக் கவ்வி வானரங்களை அழித்தல்
 

7620.

பாதம் கைகளோடு இழந்தனன், படியிடை 

இருந்து, தன் பகு வாயால், 

காதம் நீளிய மலைகளைக் கடித்து இறுத்து 

எடுத்து, வெங் கனல் பொங்கி, 

மீது மீது தன் அகத்து எழு காற்றினால் 

விசைகொடு திசை செல்ல 

ஊத ஊதப்பட்டு, உலந்தன வானரம், 

உருமின் வீழ் உயிர் என்ன,