பக்கம் எண் :

974யுத்த காண்டம் 

பாதம் கைகளோடு இழந்தனன்- கால்களையும் கைகளையும்
இழந்தவனாகிய கும்பகருணன்;  வெங்கனல்  பொங்கி- கொடுஞ்
சீற்றம்  மிக்கு;  படியிடை   இருந்து  -     நிலத்திடத்திருந்து;
தன் பகுவாயால் -  தன்  பிளந்த  பெரிய   வாயினால்;  காதம்
நீளிய மலைகளை
- காதத்தளவு  நீண்டு  கிடக்கும்  மலைகளை;
கடித்து இறுத்து எடுத்து- கடித்து ஒடித்து எடுத்து; மீது மீது தன்
அகத்து எழு காற்றினால்
- மேலும்   மேலும்  தன்  உள்ளிருந்து
எழும் பெருமூச்சாகிய காற்றினால்; விசை கொடு  திசை  செல்ல
- விரைவு கொண்டு திசைகளில்  செல்லுமாறு;  ஊத  ஊதப்பட்டு-
ஊதுந்தொறும் ஊதுந்தொறும்  அக்காற்றினால்;  வானரம் உருமின்
வீழ்   உயிர்  என்ன  உலந்தன
-  குரங்குப்படை  இடியினால்
உயிரொழியும் உயிரினம் போல உயிரொழிந்தன. 
 

(349)
 

7621.

தீயினால் செய்த கண்ணுடையான், நெடும் 

சிகையினால் திசை தீய 

வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் 

விசும்புற வளைத்து ஏந்தி,

பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ, 

பிலம் திறந்தது போலும் 

வாயினால் செல, வீசினன்; வள்ளலும் 

மலர்க் கரம் விதிர்ப்புற்றான். 

 

தீயினால்    செய்த     கண்ணுடையான்   -   தீயினால்
செய்யப்பட்டாற்   போன்ற     சினத்தால்    சிவந்த  கண்களை
உடையவனான கும்பகருணன்; நெடுஞ் சிகையினால் திசை தீய-
தன்னிடம் இருந்து எவும்  நெடிய  நெருப்பு  அனலால்  திசைகள்
எல்லாம்  கருக;   வேயினால்   திணி    வெற்பு    ஒன்று-
மூங்கில்களால்  நெருங்கிய   மலை   ஒன்றினை;     நாவினால்
விசும்புற வளைத்து ஏந்தி
- நாவினால்  வானத்தைப்  பொருந்த
வளைத்து  எடுத்து; பேயின் ஆர்ப்புடை பெருங்களம் எரிந்து
எழ
-  பேய்களின்  பேரொலி  கொண்ட  பெரிய   போர்க்களம்
எரிந்து விழுமாறு; பிலம் திறந்தது போலும் வாயினால்- குகை
திறந்தது  போல்   உள்ள   வாயினால்;   செல   வீசினான்-
பெருந்தொலைவு   வீசி     எறிந்தான்; வள்ளலும் மலர்க்கரம்
விதிர்ப்புற்றான்
- அதுகண்ட வள்ளலாம்  இராமனும்  தாமரை
மலர் போன்ற கை வியப்பால் அசையப் பெற்றான்.
 

(350)