| பற்றி நூக்கலும், பார் மகள் பரிவுடன், நார் ஆர் | |
| நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் | |
| நயந்தாள். | (98-2) |
| |
| 578. | 'ஓதத்தில் மிதந்து ஓடிய கலமேல் | |
| தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான்; | |
| வேதத்து உச்சியின் மெய்ப் பொருள் நாமம் | |
| ஓதிப் பின்னும் உரைப்பதை உற்றான்: | (103-1) |
| |
| 579. | 'கயம் மேவும் இடங்கர் கழற் கதுவ, | |
| பயம் மேவி அழைத்தது பன்முறை உன் | |
| நயம் மேவிய நாமம்; மதக் கரி அன்று | |
| உயுமாறு உதவுற்றிட, வந்திலையோ? | (112-1) |
| |
| 580. | 'வேதன் சிரம் ஒன்றை வெறுத்தமையால், | |
| காதும் பிரமக் கொலை காய, உலைந்து, | |
| ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன் | |
| ஏதம் கெட வந்து, இரவு ஓட்டிலையோ? | (112-2) |
| |
| 581. | 'அது கண்டு, அடல் வஞ்சகர், அப் பொழுதில், | |
| கதம் மிஞ்சிய மன்னன் முனே கடுகி, | |
| "புதல்வன் இறவாது பொருப்பு முநீர் | |
| மிதவைப்பட மேவினன்" என்றனரால். | (113-1) |
| |
| 582. | 'மிடல் கொண்டு அவர் வீசு கரம் பொடிபட்டு | |
| உடல் சிந்திட, உட்கினர்; "மற்று அவனுக்கு | |
| ஒடிவு ஒன்று இலது" என்று அவர் ஓதும் முனம், | |
| விடம் அஞ்ச எழுந்தனன், வெய்யவனே. | (116-1) |
| |
| 583. | 'நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் | |
| செம் பொன் | |
| தூணில் நின்றனனே அன்றி, தோன்றியது இலது' | |
| என்று ஒன்ற, | |
| வேணுதண்டு உடையோன் வெய்ய வெள்ளியே | |
| விளம்ப, வெள்ளி | |
| காண வந்து அனைய சீயம் கணத்திடைக் கதிர்த்தது | |
| அம்மா! | (128-1) |