| 584. | 'ஈது அவன் மகிழ்தலோடும், இரணியன் எரியின் | |
| பொங்கி, | |
| "சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம் | |
| எல்லாம் | |
| போதும்; ஓர் கணத்தில் இன்னே போக்குவேன் | |
| போக்குவேன்" என்று | |
| ஓதினன், அண்ட கோளம் உடைந்திட உருத்துச் | |
| சொல்வான். | (128-2) |
| |
| 585. | அப் புறத்து அளவுஇல் கோடி அண்டங்கள் | |
| அனைத்து உள்ளாக, | |
| வெப்புறும் அனந்த கோடி வெள்ளம் என்று உரைப்பர், | |
| மேலாம் | |
| துப்புடைக் கனகன் சேனைத் தொகை; அவை | |
| அனைத்தும் செந் தீ | |
| ஒப்புற நகைத்து, நீறாய் எரித்தது, ஓர் கடவுள் சீயம். | (142-1) |
| |
| 586. | 'இத் திறம் அமரின் ஏற்று, ஆங்கு இருவரும் | |
| பொலிந்தகாலை, | |
| பொய்த்திறற் கனகன் வேண்டும் போர் பல இயற்றி, | |
| பின்னும், | |
| எத்தனை கோடி கோடி மாயங்கள் இயற்ற, நோக்கி, | |
| முத்தனும் முறுவல்கொண்டு, ஆங்கு அவை எலாம் | |
| முடித்து நின்றான். | (149-1) |
| |
| 587. | நெருப்பு எனக் கனகன் சீறி, நிலம் முதல் புவனம் | |
| அஞ்ச, | |
| பொருப்பு இனம் எவையும் சிந்திப் பொடிபடக் | |
| குதித்து, போர் வாள் | |
| தரிப்புறச் சுழற்றித் தாக்க வருதலும், தரும மூர்த்தி | |
| பருப்பதம் கடந்த தோளான் பதம் இரண்டு ஒரு கை | |
| பற்றா, | (149-2) |
| |
| 588. | 'அழிவு இலான் வயிர மார்பத்து, அமலன் மானுடம் | |
| ஆம் சீய | |
| எழில் உலாம் உருவு கொண்டு, ஆங்குஇரு கையின் | |
| உகிர் வாள் ஓச்சி, | |