| கழியவே, பிளத்தலோடும், கனக மா மேரு விண்டு | |
| கிழியவே, குருதி ஓதம் கிளர்ந்தபோல் கிளர்ந்தது | |
| அம்மா! | (153-1) |
| |
| 589. | 'இரணியன் வயிர மார்பும் இரு பிளவாகக் கீறிக் | |
| கரை அறும் அவுண வெள்ளப் படை எலாம் கடிதின் | |
| மாய்த்து, | |
| தரை முதல் ஆன அண்டப் பரப்பு எலாம் தானே | |
| ஆகி, | |
| கருணை கொள் அமலன் பல்வேறு உயிர் எலாம் | |
| காத்து நின்றான். | (153-2) |
| |
| 590. | 'மங்கை ஒரு பாகன் முதல் அமரர், மா மலர்மேல் | |
| நங்கைதனை ஏவுதலும், நாராயணக் கடவுள் | |
| சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி, | |
| பொங்கு பரஞ் சுடராய் எங்கும் பொலிய நின்றான். | (164-1) |
| |
| 591. | 'ஈது ஆங்கு அமலன் இயம்ப, எழிற் புதல்வன் | |
| நாதாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும் | |
| பாதாம்புய மலரில் பல் முறையும் தான் பணிந்து, | |
| 'வேதாந்த மெய்ப்பொருளே!' என்று விளம்பலுற்றான். | (168-1) |
| |
| 592. | ' "சீலம் உறுவோய்!' உனக்குச் செப்பும் திருநாமம் | |
| மேலோர் புகழ் பிரகலாதன்" என, விரும்பி, | |
| நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும், | |
| மேலாம் அமரர்களும், யாரும், விளம்ப' என்றான். | (173-1) |
| |
4. வீடணன் அடைக்கலப் படலம் |
| 593. | சிரத்தொகை அனைத்தையும் துளக்கி, தீ எழக் | |
| கரத்தொடு கரம் பல புடைத்து, 'காளை! நீ | |
| உரைத்திடும் உறுதிகள் நன்று, நன்று!' எனாச் | |
| சிரித்தனன், கதம் எழுந்து இனைய செப்புவான்: | (1-1) |