| 594. | 'அன்று வானரம் வந்து, நம் சோலையை அழிப்ப, | |
| "கொன்று தின்றிடுமின்" என, "தூதரைக் கோறல் | |
| வென்றி அன்று" என விலக்கினை; மேல் விளைவு | |
| எண்ணித் | |
| துன்று தாரவன்-துணை எனக் கோடலே துணிந்தாய். | (6-1) |
| |
| 595. | 'நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென்; | |
| சீரிது என்று உணர்கிலை; சீறிப் பொங்கினாய்; | |
| ஓர்தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார், | |
| தேர்வுறின், அவர்களின் சிறந்த பேதையோர்.' | (11-1) |
| |
| 596. | 'மற்று ஒரு பொருள் உளது என்? நின் மாறு இலாக் | |
| கொற்றவ! சரண்' எனக் கூயது ஓர் உரை | |
| உற்றது, செவித்தலத்து; ஐயன் ஒல்லென | |
| நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா, | (33-1) |
| |
| 597. | ' "எந்தையே இராகவ! சரணம்" என்ற சொல் | |
| தந்தவர் எனைவரோ? சாற்றுமின்!' என, | |
| மந்தணம் உற்றுழீஇ, வய வெஞ் சேனையின் | |
| முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம்அரோ: | (33-2) |
| |
| 598. | 'மேலைநாள், அமுதமும் விடமும் வெண்கடல் | |
| மூலமாய் உதித்தன; முறையின் முற்றுதல் | |
| சாலுமோ, ஒன்று எனக் கருதல் தக்கதோ-- | |
| ஞால நாயக!--தெரிந்து எண்ணி நாடிலே? | (86-1) |
| |
| 599. | 'ஒருவயிறு உதித்தனர், அதிதி, ஒண் திதி, | |
| இருவர்; மற்று அவரிடத்து எண்ணில், எம்பிரான்! | |
| சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார்; | |
| கருதின் மற்று ஒன்று எனக் கழறலாகுமோ? | (86-2) |
| |
| 600. | 'எப்பொருள்? ஏவரே? உலகின் ஓர் முறை | |
| ஒப்பினும், குணத்து இயல் உணரின், பேதமாம் | |
| அப் பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து, | |
| அகம் | |
| மெய்ப் பொருள் கோடலே விழுமிது' என்பரால். | (86-3) |