பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள் 995

601.'ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து
ஓவலின் இவர் தமக்கு உணர ஒண்ணுமோ?
தேவர்கள் தேவன் நீ; தெளியின், அன்னவர்க்
கூவி, இங்கு அறிவது கொள்கை ஆகுமால். (91-1)
 
602.மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து,
வேடன்
மீது ஒரு மரத்தில் சேர, வேண்டு உரை அரிக்குச்
சொல்லி,
பேதம் அற்று இருந்தும், அன்னான் பிரிந்த
வஞ்சத்தை ஓர்ந்தும்,
காதலின் கனி காய் நல்கிக் காத்ததும் கவியது
அன்றோ?(116-1)
 
603.என்ன முன் பருதிமைந்தன் எழுந்து அடி வணங்கி,
'எந்தாய்
சொன்னதே துணிவது அல்லால், மறுத்து ஒரு
துணிவும் உண்டோ?
உன் உளத்து உணராது ஏது? உனக்கு அரிது
யாதோ?' என்னாப்
பன்னி, மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து
உரைக்கலுற்றான்.(117-1)
 
604.வானவர் இதனைக் கூற, வலங்கொடு தானை
வைப்பை,
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும்,
'தாழாது
ஊனுடைப் பிறவி தீர்ந்தேன்' என மனத்து உவந்து,
ஆங்கு அண்ணல்
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது
நின்றான்.(151-1)
 
5. இலங்கை கேள்விப் படலம்
 
605.திரு மறு மார்பனை இறைஞ்ச, செல்வனும்,
அருள் சுரந்து, அரக்கனை அருகு இருத்தியே,