| 'அரு வரை அனைய தோள் அறிஞ! நீ புகல் | |
| பொருள் உளது எமக்கு; அது புகலக் கேட்டியால். | (14-1) |
| |
| 606. | மருக் கிளர் தாமரை வாச நாள்மலர் | |
| நெருக்கிடு தடம் என இருந்த நீதியான். | |
| திருக் கிளர் தாமரை பணிந்த செம்மலை, | |
| 'இருக்க, ஈண்டு எழுந்து' என இருந்தகாலையில். | (14-2) |
| |
| 607. | 'வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு, | |
| இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனைத் | |
| தலம் கொடு சமைத்து, நல் நகரும் தந்து, இதற்கு | |
| "இலங்கை" என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள். | (18-1) |
| |
| 608. | 'ஆய இந் நகரிடை, அரக்கர் ஆகிய | |
| தீயவர் தொகையினைத் தெரிக்கின், எண் இல் நாள் | |
| போயிடத் துணிந்து, அவை புந்தி ஓரினும் | |
| ஓயுமோ? அறிந்தவை உரைப்பென், ஆழியாய்! | (19-1) |
| |
| 609. | 'பேயர்கள் என்ன யான் பிதற்ற, பேர்கிலா | |
| மா இரும் புற மதில் வகுத்த மாப் படை | |
| ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள் | |
| ஆயிர வெள்ளமே அறிந்தது, ஆழியாய்! | (28-1) |
| |
| 610. | 'ஈங்கு இவை அன்றியும், ஏழு தீவினும், | |
| ஓங்கு பாதலத்தினும், உயர்ந்த வானத்தும், | |
| தாங்கிய சக்கர வாளச் சார்பினும், | |
| ஆங்கு அவன் படைதனக்கு அளவை இல்லையால். | (30-1) |
| |
| 611. | 'ஆயவர் அளவிலர், அறத்தை நுங்கிய | |
| தீயவர், தேவரைச் செறுத்து, தேவர் ஊர் | |
| காய் எரி படுத்திய கடுமையார்களில், | |
| நாயக! அறிந்தமை நவிலக் கேட்டியால். | (32-1) |