| 612. | 'இன்னும் மைந்தர்கள் இயம்பின், மூவாயிர கோடி | |
| என்ன உண்டு; அவர் இரதமும், கரிகளும், பரியும், | |
| துன்னும் ஆள் வகைத் தொகுதியும், செறிந்திட, | |
| மேல்நாள் | |
| பன்னகாதிபன் உலகினைப் பரிபவப் படுத்தோர். | (51-1) |
| |
| 613. | கோ...ன் குடைப்பரா கடு களிற்றை மீக்கொள்ளா | |
| வாடலிந்திர......ளடைவர வமரிற் | |
| கோடி வெங்கரி கோள் அரி கண்டெனக் குலையா | |
| ஓடினான் தரு முதலியர் பிற விழுந் துருகி. | (56-1) |
| |
| 614. | 'பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் | |
| கொடுக்கும் | |
| திண் திறல் பெறும் வானகத் தேர் ஒன்றின் | |
| இவர்ந்தே, | |
| அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து, அரசுரிமை | |
| கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில், | |
| கொடியோன். | (58-1) |
| |
| 615. | 'சுற்று தன் கிளைப் பரப்பொடும் தொலைவு இன்றி | |
| வாழ்தற்கு | |
| உற்ற மூன்றரைக் கோடியின் உகம் அவன் தவத்தின் | |
| பெற்றனன், சிவன் கொடுத்திடப் பெரு வரம்; | |
| பெரியோய்! | |
| இற்று அவன் செயல்' என்று கொண்டு இனையன | |
| உரைப்பான்: | (58-2) |
| |
| 616. | "ஈது நிற்க, மற்று எந்தை! நீ ஏவிய தூதன் | |
| மோது வாரிதி கடந்து, ஒரு கணத்தினில் முடுகி, | |
| ஆதி நாயகிதன்னைக் கண்டு, அணி நகர் அரணும், | |
| காது வெஞ் சினத்து அரக்கர்தம் வலிமையும், | |
| கடந்தான். | (59-1) |
| |
| 617. | மழுவும் ஈட்டியும் தோட்டியும் முசலமும் மலையும் | |
| தழுவு மாப் படை முடிவு இலாது அதனொடும் தாமும், | |