பக்கம் எண் :

998யுத்த காண்டம் 

எழுவர் சூட்சியின் தலைவர்கள், கிளர் ஒளி இரவிக்
குழுவின் வாய்ப்படு புழு என, வழுவுறக் குறைந்தார்.(63-1)
 
618.'இலங்கை வெந்தது; வேறு இனி இயம்புவது
எவனோ?
அலங்கலோடு செஞ் சாந்தமும், அன்று தான்
அணிந்த
கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும், கதிர்
வாள்
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள்
இருந்தான்.(65-1)
 
6. வருணனை வழி வேண்டு படலம்
 
619.என்று உரைத்து, இன்னும் சொல்வான்; 'இறைவ!
கேள்; எனக்கு வெய்யோர்
என்றும் மெய்ப் பகைவர் ஆகி, ஏழு பாதலத்தின்
ஈறாய்
நின்றுள தீவின் வாழ்வார், நிமல! நின் கணையால்,
ஆவி
கொன்று எமைக் காத்தி!' என்றான்; குரிசிலும்
கோறலுற்றான்.(78-1)
 
7. சேது பந்தனப் படலம்
 
620.சாற்று மா முரசு ஒலி கேட்டு, தானையின்
ஏற்றமோடு எழுந்தனர், 'எறி திரைக் கடல்
ஊற்றமீது ஒளித்து, ஒரு கணத்தில் உற்று, அணை
ஏற்றதும்' எனப் படைத் தலைவர் யாருமே.(4-1)
 
621.வல் விலங்கு வழாத் தவர் மாட்டு அருள்
செல் வலம் பெறுஞ் சிந்தையின் தீர்வரோ?
'இவ் விலங்கல் விடோம் இனி' என்பபோல்,
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான்.(25-1)