பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள் 999

622.தம் இனத்து ஒருவற்கு ஒரு சார்வு உற,
விம்மல் உற்று, விடாது உறைவோர்கள்போல்,
செம்மை மிக்க குரக்கினம் சேர்க்கையால்,
எம் மலைக் குலமும் கடல் எய்துமே,(29-1)
 
623.இன்னவாறு அங்கு எழுபது வெள்ளமும்,
அன்ன சேனைத் தலைவரும், ஆழியைத்
துன்னி நின்று, விடாது இடை தூர்த்தலால்,
பொன் இலங்கை தொடுத்து அணை புக்கதே.(65-1)
 
8. ஒற்றுக் கேள்விப் படலம்
 
624.என்று, நளனைக் கருணையின் தழுவி, அன்பாய்
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து
துன்று கதிர் பொற்கலனும் மற்றுள தொகுத்தே,
'வென்றி, இனி' என்று, படையோடு உடன்
விரைந்தான்.(4-1)
 
625.இறுத்தனன்--ஏழு-பத்து வெள்ளமாம் சேனையோடும்,
குறித்திடும், அறுபத்தேழு கோடியாம் வீரரோடும்,
பொறுத்த மூ-ஏழு தானைத் தலைவர்களோடும்,
பொய் தீர்
அலத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா
அமலன் அம்மா!(13-1)
 
(நளனுக்கு முடி சூட்டு படலம்)
 
626.என்று மகிழ் கொண்டு, இரவி மைந்தனை இராமன்,
'வன் திறலினான் நளன் வகுத்த அணை, மானக்
குன்றம் நெடுநீரின்மிசை நின்று இலகு கொள்கை
நன்று என முயன்ற தவம் என்கொல்?நவில்க!' என்றான்.(13-2)
 
627.நவிற்றுதிர் எனக் கருணை வள்ளல் எதிர் நாமக்
கவிக்கு இறைவன் எய்தி, இரு கை மலர் குவித்தே,
'புவிக்கு இறைவ! போதின் அமர் புங்கவனிடத்தே
உவப்புடன் உதித்தவர்கள் ஓர் பதின்மர் என்பார். (13-3)