| 635. | 'மற்றைய தினத்தின் இறை எங்கு என மருண்டே | |
| பொற்றொடி மடந்தையை விளித்து, "உரை" என, | |
| போய் | |
| நல் தவ மகச் செயல் நடுக்கி, அயல் நண்ணிச் | |
| சொற்றனள் எடுத்து; வழிபாடு புரி தூயோன். | (13-11) |
| |
| 636. | 'பூசனை புரிந்தவன் வயத்து இறை புகாமே | |
| கோசிகம் அமைத்து, மணி மாடம்அது கோலி, | |
| நேசம் உற வைத்திடவும், நென்னல் என ஓடி | |
| ஆசையின் எடுத்து, அவனும் ஆழ்புனலில் இட்டான். | (13-12) |
| |
| 637. | 'இப்படி தினந்தொறும் இயற்றுவது கண்டே | |
| மெய்ப் புதல்வனைச் சினம் மிகுத்திட வெகுண்டும், | |
| அப்படி செய் அத்திறம் அயர்த்திலன்; "இவன்தன் | |
| கைப்படல் மிதக்க" என ஓர் உரை கதித்தான். | (13-13) |
| |
| 638. | 'அன்று முதல் இன்னவன் எடுத்த புனல் ஆழா | |
| என்று அரிய மாதவர் இசைத்தபடி இன்னே | |
| குன்று கொடு அடுக்க, நிலைநின்றது, குணத்தோய்! | |
| என்று நளன் வன்திறம் எடுத்துமுன் இசைத்தான். | (13-14) |
| |
| 639. | சொற்றவை அனைத்தையும் கேட்டு, தூய் மறை | |
| கற்றவர் அறிவுறும் கடவுள், 'இத் தொழில் | |
| முற்றுவித்தனை உளம் மகிழ, மொய்ம்பினோய்!-- | |
| மற்று உனக்கு உரைப்பது என், முகமன்? | |
| வாழியாய்!' | (13-15) |
| |
| 640. | 'ஐயன் நல் இயற்கை, எப் பொருளும் அன்பினால் | |
| எய்தினர் மகிழ்ந்திட ஈயும், எண்ணினால்; | |
| செய் தொழில் மனக்கொள, செய்த செய்கை கண்டு | |
| உய் திறம் நளற்கும் அன்று உடைமை ஆதலான். | (13-16) |