| 641. | 'இத் திறம் புரி நளற்கு இன்பம் எய்தவே | |
| வித்தக இயற்றிட வேண்டும்' என்றனன்; | |
| உத்தமன் உரைப்படி உஞற்றற்கு எய்தினார் | |
| முத் திறத்து உலகையும் ஏந்தும் மொய்ம்பினார். | (13-17) |
| |
| 642. | இங்கு இவை தாதையை எண்ணும் முன்னமே | |
| அங்கு அவன் வணங்கினன், அருகின் எய்தினான்; | |
| 'புங்கவ நின் மகற்கு இனிய பொன் முடி | |
| துங்க மா மணிக் கலன் தருதி, தூய்மையாய்!' | (13-19) |
| |
| 643. | என்றலும், மணி முடி, கலன்கள், இன் நறாத் | |
| துன்று மா மலர்த் தொடை, தூய பொன்-துகில், | |
| குன்று எனக் குவித்தனன்; கோல மா மலர் | |
| மன்றல் செய் விதானமும் மருங்கு அமைத்து அரோ. | (13-19) |
| |
| 644. | முடி புனை மண்டபம் ஒன்று முற்றுவித்து, | |
| இடி நிகர் பல் இயம் இயம்ப, வானரர் | |
| நெடிய வான் கங்கையே முதல நீத்த நீர் | |
| கடிது கொண்டு அணைந்தனர் கணத்தின் என்பவே. | (13-20) |
| |
| 645. | நளன்தனை விதிமுறை நானம் ஆடுவித்து, | |
| இளங் கதிர் அனைய பொன்-துகிலும் ஈந்து, ஒளிர் | |
| களங்கனி அனையவன் ஏவ, கண் அகல் | |
| வளம் திகழ் மண்டப மருங்கின் எய்தினான். | (13-21) |
| |
| 646. | ஆனதோர் காலையின் அருக்கன் மைந்தனும் | |
| ஏனைய வீரரும் இலங்கை மன்னனும் | |
| வானரர் அனைவரும் மருங்கு சூழ்வர, | |
| தேன் நிமிர் அலங்கலும் கலனும் சேர்த்தியே, | (13-22) |
| |
| 647. | பொலங்கிரி அனைய தோள்-தம்பி போந்து, ஒளி | |
| இலங்கிய மணி முடி இரு கை ஏந்தினான், | |
| அலங்கல் அம் தோள் நளற்கு அன்பின் | |
| சூட்டினான்-- | |
| 'குலங்களோடு இனிது வாழ்க!' என்று கூறியே. | (13-23) |