| 648. | இளையவன் திரு மலர்க் கையின் ஏந்திய | |
| ஒளி முடி புனைந்திட உலகம் ஏழினும் | |
| அளவு இலா உயிர்த்தொகை அனைத்தும் வாழ்த்தியே | |
| 'நளன் இயற்றிய தவம் நன்று' என்று ஓதினார். | (13-24) |
| |
| 649. | முடி புனை நளன் எழுந்து, இறைவன் மொய் கழல் | |
| அடிமிசை வணங்கிட, அவனுக்கு அந்தம் இல் | |
| படி புகழ் ஆசிகள் பகர்ந்து, 'பார்மிசை | |
| நெடிது உற நின் குலம்!' என நிகழ்த்தினான். | (13-25) |
| |
| 650. | மற்றையர் அனைவரும் அருள் வழங்கவே | |
| பொன்-திரள் மணி முடி புனைந்த போர்க் களிறு | |
| உற்று, அடி வணங்கிட, உவந்து தாதையும், | |
| பெற்றனன் விடை கொடு, பெயர்ந்து போயினான். | (13-26) |
| |
| 651. | இன்னணம் நிகழ்ந்தபின், இனிதின், எம்பிரான் | |
| தன் நிகர் சேதுவை நோக்கி, தையலாள் | |
| இன்னல் தீர்த்திட எழுந்தருள எண்ணினான்; | |
| பின் அவண் நிகழ்ந்தமை பேசுவாம்அரோ. | (13-27) |
| |
| 652. | கேட்டலும், நளன் என்று ஓதும் கேடு இலாத் தச்சன், | |
| கேள்வி | |
| வாட்டம் இல் சிந்தையான், தன் மனத்தினும் கடுகி, | |
| வல்லே | |
| நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாகக் | |
| காட்டினன், மதிலினோடும் பாசறை, கடிதின் அம்மா! | (14-1) |
| |
| 653. | போயினன், அமலன் பாதம் பொருக்கென வணங்கி, | |
| 'இன்னே | |
| ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது, அமல!' | |
| என்றான்; | |
| நாயகன்தானும், வல்லே நோக்கினன் மகிழ்ந்து, | |
| 'நன்று!' என்று | |
| ஏயினன், எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே. | (16-1) |