பக்கம் எண் :

1004யுத்த காண்டம் 

654.அவ் வகை அறிந்து நின்ற வீடணன், அரியின்
வீரர்க்கு
ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத,
செவ்விதின் மாயச் செய்கை தெளிந்திடுமாறு, தாமே
கைவலியதனால் பற்றிக் கொண்டனர், கவியின் வீரர்.(25-1)
 
655.என அவர் இயம்பக் கேட்ட இறைவனுக்கு, இலங்கை
வேந்தன்
தனது ஒரு தம்பி, 'அன்னோர் சாற்றிய வாய்மை
மெய்யும்
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும், இன்னே
காண்டி;
நினைவதன்முன்னே விஞ்சை நீக்குவென்' என்று
நேர்ந்தான்.(29-1)
 
656.ஆங்கு அவர் புகலக் கேட்ட ஐயனும், அவரை நோக்கி,
'ஈங்கு இது கருமமாக எய்தினீர்என்னின், நீர் போய்,
தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே
ஓங்கிய உவகை வார்த்தை உரையும்' என்று
ஓதலுற்றான்.(32-1)
 
657.இன்னவாறு இவர்தம்மை இங்கு ஏவிய
மன்னர் மன்னவன் ஆய இராவணன்
அன்ன போது அங்கு அளவு இல் அமைச்சரோடு
உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம்:(38-1)
 
658.சொல்லும் மந்திரச் சாலையில், தூய் மதி
நல் அமைச்சர், நவை அறு கேள்வியர்,
எல்லை இல்லவர் தங்களை நோக்கியே,
அல் அரக்கர் பதியும் அங்கு ஓதுவான்.(41-1)
 
659.'ஈது எலாம் உரைத்து என் பயன்? இன்று போய்க்
காதி, மானுடரோடு கவிக் குலம்