பக்கம் எண் :

34 யுத்த காண்டம்

6115.

'தொகை நிலைக் குரங்குடை மனிதர்ச் சொல்லி

என்?

சிகை நிறச் சூலிதன் திறத்துச் செல்லினும்,
நகை உடைத்தாம்; அமர் செய்தல் நன்று' எனா,
புகைநிறக்கண்ணனும் புகன்று, பொங்கினான்.
 

புகை நிறக் கண்ணனும்- மேல் குறிப்பிடப்பட்டவர்களேயன்றிப்
புகைநிறக் கண்ணன் (தூம்ராட்சன்) என்னும் அரக்கனும்; சிகை
நிறச் சூலிதன் திறத்துச் செல்லினும்
- நம் தலைமுடி போல் சிவந்த
நிறமுடையவனாய்த் திரிசூலம் ஏந்திய சிவனை எதிர்த்துப் போர்
செய்வதுகூட; நகை உடைத்தாம்- நம் வீரப் பெருமை சிரிப்புக்கு
இடமாகி விடும்; தொகை நிலைக் குரங்குடை- கூட்டமான குரங்குப்
படையைக் கொண்டுள்ள; மனிதர் சொல்லி என்- மனிதர்கள் மேல்
போர்செய்வது பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அமர்
செய்தல் நன்று
- இப்போது வேறு வழி இல்லாமையால் அந்த
மனிதர்களோடு போர் செய்வதே நல்லது; எனாப் புகன்று - என்று
சொல்லி; பொங்கினான் - ஆத்திரத்தால் பொங்கினான்.

தூம அட்சன் - புகை நிறக் கண்ணன். சிவபிரானை எதிர்த்துப்
போர் செய்வதே தன் இனத்துக்குக் கேவலமாயிருக்க, குரங்குப்
படை கொண்ட மனிதரோடு போர் செய்ய வேண்டி வந்ததே என்பது
புகை நிறக் கண்ணன் பொங்கியதற்குக் காரணம்.

(45)

6116.

மற்று அவன் பின்னுற, மற்றையோர்களும்,-
'இற்றிதுவே நலம்; எண்ணம் மற்று இல்' என்று,
உற்றன உற்றன உரைப்பது ஆயினார்-
புற்று உறை அரவு எனப் புழுங்கு நெஞ்சினார்.
 

புற்று உறை அரவு என- புற்றில் வாழும் நாகப்பாம்பைப்
போல; புழுங்கும் நெஞ்சினார் - வெந்து புழுங்கும் மனம்
உடையவரான; மற்றையோர்களும் - மற்றும் உள்ள அரக்க
வீரர்களும்; மற்று அவன் பின் உற - அந்தத் தூம்ராட்சன்
கூறிய பின்பு; இற்று இதுவே நலம் - இத்தகைய இதுவே
நன்மையாகும்; எண்ணம் மற்று இல் - வேறு நினைப்பதற்கு
எதுவுமில்லை; என்று உற்றன உற்றன - என்று அவரவர்
கருத்தில் தோன்றியவாறு; உரைப்பதாயினர்- பேசலாயினார்கள்: