தவத்தியை-இரங்காய், வன்தொழிலினாய் மறை துறந்து என்று சிறை வைத்தாய் அன்று அரக்கர் புகழ் அழிவதாயின என இயையும் பல வகையாலும் புகழ் சேர்ந்தமையை 'ஆயின' என்ற பன்மைச் சொல் குறித்தது. |
ஒருவன்-இராமன் தவத்தி-சீதை. வன்தொழில்-வஞ்சனை செய்து கவர்ந்த செயல் 'மறை துறந்து' என்பதற்கு 'முறை துறந்து' என்பது பாடமாயின் அரச நீதியை விட்டு என்பது பொருளாகும். இசை-புகழ். தீய செயலால் புகழ் பெற நினைப்பது அறிவுடைமை அன்று என்பது கருத்து. பொறுத்தல் - தாங்குதல், சுமத்தல். "எளிதென இளில்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி" (குறள் 145) இங்கு நினைவு கூரத்தக்கது. |
(51) |
6122. | 'ஆசு இல் பர தாரம்அவை அம் சிறை அடைப்பேம்; |
| மாசு இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப் |
| பேசுவது மானம்; இடை பேணுவது காமம்; |
| கூசுவது மானுடரை; நன்று, நம கொற்றம்! |
| |
ஆசு இல் பரதாரம் அவை - ஒரு குற்றமும் இல்லாத வேறு ஒருவன் மனைவியை; அஞ்சிறை அடைப்பேம் - அழகிய சிறையிலே அடைத்து வைப்போம்; மாசு இல் புகழ் காதல் உறுவேம் - குற்றமற்ற புகழ் அடையவும் விரும்புவோம்;வளமை கூர - பெருமை மிக; பேசுவது மானம் - பேசுவதோ வீர உரைகள்;இடை பேணுவது காமம்- அதற்கிடையிலே விரும்புவது காமம்;கூசுவது மானுடரை - அஞ்சுவது மானிடர்களைப் பார்த்து; நம் கொற்றம் நன்று - நமது வெற்றி நன்றாய் இருக்கிறது. |
ஆசு, மாசு-என்பன குற்றம் என்ற பொருள் உடையவையாம். பரதாரம் - வேறு ஒருவனது மனைவி. அம்சிறை-அழகிய சிறை. சிறையின் கொடுமையைக் குறித்து நின்றது. 'பரதாரம்' அவை எனப் பன்மையில் கூறியது. பல பெண்களை விரும்பியவன் என்பதைச் சுட்டிக் காட்டி நின்றது போலும். கொற்றம்-வெற்றி, வீரமுமாம். 'நன்று' இகழ்ச்சி குறித்து நின்றது. |
(52) |
6123. | 'சிட்டர் செயல் செய்திலை; குலச் சிறுமை செய்தாய்; |
| மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி, மன்னா! |
| விட்டிடுதுமேல், எளியம் ஆதும்; அவர் வெல்ல, |
| பட்டிடுதுமேல், அதுவும் நன்று; பழி அன்றால். |