பக்கம் எண் :

40யுத்த காண்டம் 

எடுத்தான்; நிரம்பிடுவது அன்று அதுவும் - இராமனது ஆற்றல்
அத்துடன் நிறைவடைவது அல்ல;நின்றது இனி நம் பால் உரம்
படுவதே
-  இனி மிகுந்திருப்பது நம்மிடம் உள்ள பலம் அழிந்து
படுவதே;இதனின் மேல் உறுதி   உண்டோ  - இதற்கு மேல்
நமக்கு ஒரு நன்மை உள்ளதோ?
 

மரன்-மரம் (மகரத்துக்கு னகரம் போலியாக நின்றது) படர்தல்-
அடர்ந்திருத்தல், மிக்கிருத்தலுமாம். ஒருவன்-  இங்கு   இராமன்.
களை கட்டான்-களை எடுத்தான்.  நெல்லுக்குப் புல் களையாதல்
போலே, தேவர்களுக்கும்,  முனிவர்களுக்கும்   அசுரர்   களை
எனப்பட்டனர்.
 

(54)
 

6125.

'வென்றிடுவர் மானுடவரேனும், அவர்தம்மேல்
நின்று, இடைவிடாது நெறி சென்று, உற நெருக்கித்
தின்றிடுதல் செய்கிலம்எனின், செறுநரோடும்
ஒன்றிடுவர் தேவர்; உலகு ஏழும் உடன் ஒன்று ஆம்.
 

வென்றிடுவர் மானுடவரேனும் - அந்த மானிடர்கள் வெற்றி
பெறுவரென்றாலும்;  அவர் தம் மேல் நின்று - அவர்கள் மேல்
படை கொண்டு சென்று; இடைவிடாது நெறி சென்று - இடையில்
விலகாமல் அவர்கள் வரும் வழியே   சென்று; உற  நெருக்கி -
அவர்களை   மிகவும்   துன்புறுத்தி; தின்றிடுதல்   செய்கிலம்
எனின்
- கொன்று  தின்று   விடுவதை   நாம்   செய்யவில்லை 
என்றால்;செறுநரோடும் - அந்தப் பகைவராகிய   மனிதருடனே;
தேவர்   ஒன்றிடுவர்  -   தேவர்களும் சேர்ந்து விடுவார்கள்;
உலகு ஏழும் - ஏழுலகத்தில் உள்ளவர்களும்;உடன்   ஒன்று
ஆம்
- அவர்களோடு சேர்ந்து விடுவார்கள்.
  

மானுடவர்-மானிடர்; இங்கு ராம இலக்குவர்.
  

(55)
 

6126.

'ஊறு படை ஊறுவதன் முன்னம், ஒரு நாளே, 

ஏறு கடல் ஏறி, நரர் வானரரை எல்லாம் 

வேறு பெயராதவகை, வேரொடும் அடங்க 

நூறுவதுவே கருமம்' என்பது நுவன்றான். 

 

ஊறுபடை - அந்தப் பகைவர்களின் மிகுந்த படை; ஊறுவதன்
முன்னம்
- இங்குப் பெருகி வருவதற்கு முன்பே; ஒரு நாளே ஏறு
கடல்  ஏறி
- ஒரே நாளில்  இப்பெரிய கடலைக் கடந்து சென்று;
நரர் வானரரை எல்லாம் - அந்த மனிதர்களையும், குரங்குப்