இந்திரசித்து இராவணனைத் தடுத்து நானே சென்று வென்று வருவேன் எனல் |
| 6128. | என்று அவன் இயம்பியிடும் எல்லையினில், 'வல்லே |
| சென்று படையோடு, சிறு மானுடர் சினப் போர் |
| வென்று பெயர்வாய், அரச ! நீ கொல் ? என வீரம் |
| நன்று பெரிது!' என்று மகன் நக்கு, இவை |
| நவின்றான்: |
| |
என்று அவன் இயம்பியிடும் எல்லையினில் - என்று இராவணன் கூறிய சமயத்திலே;மகன் நக்கு - அவன் மகனாகிய இந்திர சித்து கோபமாகச் சிரித்து;அரச - அரச குல வேந்தனே! வல்லே படையோடு சென்று - விரைவாக படையுடனே சென்று; சிறு மானுடர் - அந்த அற்ப மனிதர்களுடன்; சினப்போர் வென்று - சினம் கொண்டு போரிட்டு வென்று; பெயர்வாய் நீ கொல் - திரும்பிப் பெயர்ந்து வருபவன் நீயோ?; என் வீரம் நன்று பெரிது - எனது வீரம் பெரிதும் நல்லது; என்று இவை நவின்றான் - என்று பின்வருமாறு கூறினான். |
நன்று பெரிது-குறிப்பு மொழி; இங்கு இகழ்ச்சிப் பொருள் தந்து நின்றது. |
(58) |
| 6129. | 'ஈசன் அருள் செய்தனவும், ஏடு அவிழ் மலர்ப் பேர் |
| ஆசனம் உவந்தவன் அளித்தனவும், ஆய |
| பாசம் முதல் வெம் படை சுமந்து, பலர் நின்றார்; |
| ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ? |
| |
ஈசன் அருள் செய்தனவும்- சிவபெருமான் அருளால் நமக்குத் தந்த ஆயுதங்களும்; ஏடு அவிழ் - இதழ்கள் மலர்ந்து விரிந்துள்ள; மணிப்பேராசனம் - தாமரை மலராகிய ஆசனத்தில்;உவந்தவன் - விரும்பி வீற்றிருப்பவனாகிய பிரமதேவன்; அளித்தனவும் ஆய - நமக்குக் கொடுத்த ஆயுதங்களும் ஆகிய; பாசம் முதல் வெம்படை - பாசம் முதலிய கொடிய ஆயுதங்களை; சுமந்து பலர் நின்றார் - கைகளில் சுமந்து கொண்டு வீரர்கள் பலர் இங்கு நிற்கிறார்கள்; ஏச உழல்வேன் ஒருவன்- உலகத்தவர் பழித்துப் பேச அதனால் வருந்தித்திரியும் ஒருவனாக; யானும் உளன் அன்றோ - நானும் இங்கு இருக்கிறேன் அல்லவா? |